இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டமா... அம்மா நடிகையின் ஆட்டத்தை பாருங்க !
சென்னை : தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒரு சில திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, பலரை ஆட்டம் போடவைத்து வாய் பிளக்க வைத்துள்ளது.

பிரகதி மஹாவடி
ஆடிய காலும்... பாடிய வாயும் சும்மா இருக்காதுனு சொல்லுவாங்க, அதை பிரகதி மஹாவாடி உண்மை என நிரூபித்துள்ளார். அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபதி தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். வயசு ஆனாலும் அழகு இன்னும் உன்னைவிட்டு போகல என்ற வசனம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும். இந்த வயதுலையும் அம்சமா இருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக
மார்டன் உடையில் கலர் கலர் புகைப்படங்களை வெளியிடுவது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என இணையத்திலேயே பிஸியாக இருக்கிறார். பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பதை பிரகதி மஹாவாடி நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.

செம்ம ஆட்டம்
தற்போது இவர், புஷ்பா திரைப்படத்தில் குட்டைப் பாவாடைப் போட்டுக்கிட்டு சமந்தா எக்கு தப்பா ஆட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா ஐட்டம் பாடலுக்கு பிரகதியும் ஸ்டெப் மாறாமல் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிலர், டான்ஸ் நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் இந்த வயசில் இப்படி ஒரு ஆட்டம் தேவையா என கேட்டு வருகின்றனர்.

அம்மா கேரக்டரில்
நடிகை பிரகதி, பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வந்தார். அதே போல இவர் தமிழில் பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்துளளார்.


Click it and Unblock the Notifications