தகாத முறையில் நடந்துகொண்ட அந்த காமெடி நடிகர்.. தனியாக அழைத்து விளாசித் தள்ளிய முன்னாள் ஹீரோயின்!

By

சென்னை: பிரபல காமெடி நடிகர் தன்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக முன்னாள் ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Aranmanai kili Pragathi reveals about her MeeToo issue | Aranmanai Kili Serial

கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க, விஜயகாந்தின் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரகதி.

ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, இப்போது அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தகாத முறையில்

தகாத முறையில்

சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து, தாரை தப்பட்டை உட்பட பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வரும் பிரகதி, சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் பற்றி பேசினர். அப்போது மூத்த காமெடி நடிகர் ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டது பற்றி முன்பு வெளியான செய்தி பற்றி கேட்கப்ப்ட்டது.

மூத்த நடிகர்

மூத்த நடிகர்

அப்போது, என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் அளித்தார். 'அந்த சம்பவம் உண்மைதான். அவர் என்னிடம் நன்றாகத்தான் பழகி வந்தார். நானும் மூத்த காமெடி நடிகர் என்கிற முறையில் நன்றாகத்தான் பழகினேன். ஒரு படப்பிடிப்பில், இருவரும் சேர்ந்து நடித்தோம். ஒரு நாள் திடீரென்று அவரது நடவடிக்கையில் எனக்குச் சந்தேகம் வந்தது.

அநாகரிகமாக

அநாகரிகமாக

அவரது பேச்சும் நடவடிக்கையும் தகாத முறையில் இருந்தன. பாலியல் ரீதியாக அநாகரிகமாக இருந்ததை உணர்ந்தேன். காலை 11 மணி இருக்கும். என்னால் ஒரு கட்டத்துக்கு மேல், அவரது நடவடிக்கையையும் பேச்சையும் ஜீரணிக்க முடியவில்லை. மாலை வரை காத்திருக்க முடிவு செய்தேன். பிறகு எனது கேரவேனுக்கு அவரை அழைத்தேன்.

பாடிலேங்குவேஜ்

பாடிலேங்குவேஜ்

'உங்களுக்கு நான் ஏதும் தவறான சிக்னல் ஏதும் கொடுத்தேனா, அல்லது எனது, பாடிலேங்குவேஜ் உங்களை அழைக்கிற மாதிரி இருந்ததா? என்று கேட்டேன். இந்த கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தலை கவிழ்ந்தபடி நின்றார். பிறகு, செட்டில், நீங்கள் நடந்துகொண்ட விதம் கேவலமானது.

அவமானம்

அவமானம்

என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இடத்திலேயே கடுமையாகத் திட்டியிருப்பேன். அது உங்களுக்கு அவமானமாகப் போயிருக்கும். உங்கள் மீதான இமேஜை மனதில் வைத்து, தனியாக அழைத்து இதைச் சொல்கிறேன் என்று கூறினேன். பிறகு அவர் சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவர் அநாகரிகமாக நடந்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X