வாத்தி கம்மிங் பாடலுக்குப்பின்.. அம்மா நடிகையின் லாக்டவுன் டான்ஸ்.. கண்டபடி கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல அம்மா நடிகை வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோவை ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க, விஜயகாந்தின் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உட்பட பல படங்களில், ஹீரோயினாக நடித்தவர் பிரகதி.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, இப்போது தமிழ், தெலுங்கில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தகாத முறையில்

தகாத முறையில்

சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து, தாரை தப்பட்டை உட்பட பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மூத்த காமெடி நடிகர் ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியாக, தகாத முறையில் நடந்துகொண்டது பற்றி கூறியிருந்தார். இந்தச் செய்தி பரபரப்பானது.

அநாகரிகமாக

அநாகரிகமாக

'அவர் என்னிடம் நன்றாகத்தான் பழகி வந்தார். நானும் மூத்த காமெடி நடிகர் என்கிற முறையில் பழகினேன். ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று அவரது நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. பாலியல் ரீதியாக அநாகரிகமாக இருந்ததை உணர்ந்தேன். பிறகு அவரை எச்சரித்து அனுப்பினேன் என்று தெரிவித்திருந்தார்.

Recommended Video

Aranmanai kili Pragathi reveals about her MeeToo issue | Aranmanai Kili Serial
மேற்கத்திய இசை

மேற்கத்திய இசை

இந்நிலையில், விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஒர்க் அவுட்டின்போது, மேற்கத்திய இசை ஒன்றுக்கு ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். 'மோசமான முயற்சி இல்லை' என்று அதில் கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர். மனசளவுல நீங்க இளமையாதான் இருக்கீங்க.. ஆனா..எதுக்கு இப்படி? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

சொல்ல முடியாது

சொல்ல முடியாது

இன்னும் சிலர் அவரது நடனத்தைப் பாராட்டியுள்ளனர். அரண்மனை கிளி சீரியல் எப்ப தொடங்கும்? என்று சிலர் கேட்டுள்ளனர். இந்த வயசுலயும் நல்லாவே ஆடறீங்க, எக்ஸ்பிரசன்ஸ் அருமை என்று கூறியுள்ள சிலர், ரொம்ப நல்லாயில்லன்னு சொல்ல முடியாது, ஓகே என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X