கர்நாடக தேர்தலில் ஓட்டு போட்ட நடிகை பிரணீதா!
பெங்களூர் : கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் 222 தொகுதிகளுக்காக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆளும் காங்கிரசுக்கும், ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 56,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. கன்னட நடிகர், நடிகைகள் பலரும் வாக்க்களித்து வருகிறார்கள்.
'சகுனி', 'மாஸ்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை பிரணீதா கர்நாடக தேர்தலில் வாக்களித்துள்ளார். வாக்களித்த பின்பு, விரலில் மை வைக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் பிரணீதா.


Click it and Unblock the Notifications











