சூர்யா, கார்த்தி படங்களின் நாயகி திடீர் திருமணம்... தொழிலதிபரை மணம் செய்த பிரணிதா

ஐதராபாத் : சூர்யா, கார்த்தி உள்ளிட்ட ஹீரோக்களுடன் தமிழில் நடித்துள்ள நடிகை பிரணிதா திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

Recommended Video

Karthi பட நடிகை Pranitha திடீர் திருமணம் | Saguni, Pranitha Subhash, Nitin Raju

பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜன் என்பரை நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளார்.

லாக்டவுன் நேரம் என்பதால் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

சூர்யா, கார்த்தியுடன் ஜோடி

சூர்யா, கார்த்தியுடன் ஜோடி

கடந்த 2011ல் வெளியான உதயன் என்ற திரைப்படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரணிதா, தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர் தெலுங்கில் வெற்றிப் படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஹிந்தியிலும் இவர் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது திடீரென திருமணம் செய்துள்ளார்.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜன் என்பவரை பிரணிதா திருமணம் செய்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது இந்த திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வெளியானவுடன் தான் அவரது திருமணம் குறித்த செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரமண அவதார் என்ற கன்னட படத்திலும், ஹங்மா 2 என்ற இந்தி படத்திலும் மட்டும் பிரணிதா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X