சிக்கென்ற இடையை காட்டி ..சேலையில் அசத்தும் பிரணிதா…உங்க இடுப்பு சூப்பர் என வர்ணித்த ரசிகர்கள்!
பெங்களூரு : நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் இணைந்து சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
இவர் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்பொழுது ஹிந்தியில் பட்டையை கிளப்பி வருகிறார்.
தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பிரணிதா இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டியவாறு சேலையில் உள்ள புகைப்படம் ஒன்று பதிவிட்டு ரசிகர்களை தாறுமாறாக வர்ணிக்க வைத்துள்ளார்.

அறிமுகம் செய்யப்பட்டார்
நடிகர் விஜய்யின் கரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை வாரிக் குவித்த திரைப்படங்களில் ஒன்றான போக்கிரி கன்னட ரீமேக்கில் "பொர்கி" என்ற பெயரில் வெளியானது. இதில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பிரணிதா சுபாஷ் இப்போது பல கன்னட திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெற்றிப் படியாக
"பொர்கி" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று கிட்டதட்ட 100 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து பிரணிதாவின் முதல் படியே வெற்றிப்படியாக மாறியது. இதன்பின் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் நடிக்க ஆரம்பித்தார்.

எடிசன் பெஸ்ட் ஆக்ட்ரஸ்
அருள்நிதியுடன் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் கார்த்தியுடன் இணைந்து சகுனி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தற்காக எடிசன் பெஸ்ட் ஆக்ட்ரஸ் விருதையும் பெற்றார்.

எனக்கு வாய்த்த அடிமைகள்
தமிழில் ஓரிரு திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் தமிழில் இன்று வரை இருந்து வருகிறது. தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் "எனக்கு வாய்த்த அடிமைகள்" மற்றும் "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்" வெளியாகின.

இரண்டு மிகப்பெரிய படங்களில்
இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரணிதா இப்பொழுது ஹிந்தித் திரையுலகிலும் இரண்டு மிகப்பெரிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தாறுமாறான போட்டோ
பாலிவுட்டிலும் கலக்க இருக்கும் பிரணிதா சுபாஷ் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கையில் பிரணிதா இப்போது பச்சை நிற சேலையில் படுகவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள தாறுமாறான போட்டோ ஒன்று வேற லெவல் வைரலாகி வருகிறது.
Recommended Video

இடுப்பு சூப்பர்
பச்சை நிற சேலையை மிக வித்தியாசமான முறையில் சிறுத்த இடையில் சிக்கென்ற புடவையில் பிரணிதா வெளியிட்டுள்ள இந்த மெய்மறக்கும் கவர்ச்சிப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை ஜொள்ளு விட வைத்ததோடு, உங்க இடுப்பு சூப்பர் என வர்ணிக்கவும் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications