சோப்பு நுரை மட்டுமே ஆடை.. திருமண நாளில் இப்படியா? ஷாக்கான பேன்ஸ்!

சென்னை: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த பிரனீதா சுபாஷ் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர், தனது திருமண நாளை தாய்லாந்தில் கொண்டாடிய நிலையில், பாத் டப்பில் சோப்பு நுரையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பிரனீதா சுபாஷ். கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் நடிகர் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்தார். அந்த படம் நகைச்சுவை திரைப்படமாக இருந்த போது, படம் ஓரளவிற்குத்தான் ஓடியது.

pranitha subhash saguni instagram

படவாய்ப்பு இல்லை: அதையடுத்து, கார்த்திக்கின் அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாக, மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும் நன்றாக போகாததால், அவருக்கு தமிழில் படவாய்ப்பு சரியாக அமையவில்லை. இதையடுத்து, கடைசியாக பிரனீதா, அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் இந்த படமும் மொக்கப்படமாக போய்விட்டதால், இனி தமிழ் படத்தில் வாய்ப்பு வராது என்பதை தெரிந்து கொண்டு பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

pranitha subhash saguni instagram

காதல் திருமணம்: இதையடுத்து, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கொரோனா நேரத்தில் நடந்ததால், திருமணம் எளிமையாக நடந்தது. அதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது பிரனீதாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

பாத் டப்பில்: திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த பிரனீதா சுபாஷ், தங்கமணி என்ற மலையளப்படத்திலும், கன்னடத்தில் சமீபத்தில் வெளியான பிராமண அவதாரா படத்தில் சீதையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சில கன்னட படங்களிலும் அவர் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில், நடிகை பிரனீதா சுபாஷ் தனது மூன்றாம் ஆண்டு திருமண நாளை தாய்லாந்தில் சிறப்பாக கொண்டாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் பாத் டப்பில் குளித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்னும் சில ரசிகர்கள், ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திருச்சு என்பது போல் மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X