இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்.. ஒரு வழியாக மீட்ட பிரபல நடிகை!
சென்னை : நடிகை பிரீத்தா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டு இருந்தது.
Recommended Video
இந்நிலையில் எந்த ஒரு பதிவையும் பார்க்க முடியாமல் தவித்து வந்த பிரீத்தா விஜயகுமார் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான பிரீத்தா விஜயகுமார் தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டு இப்பொழுது மீண்டும் அதே ஐடியில் வந்து ரசிகர்களுக்கு புத்தம் புதிய அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார்.

பேவரைட் ஹீரோயினாக
நடிகை பிரீத்தா விஜயகுமாரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்த இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.

அறிமுக திரைப்படமாக
1998 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான ருக்மணி வெளியாக தாமதம் ஆனதால் தமிழில் சூர்யாவுடன் இவர் முதன்முதலாக இணைந்து நடித்த "சந்திப்போமா" வெளியாகி அறிமுக திரைப்படமாக ஆனது.

மலையாள திரைப்படங்களில்
சந்திப்போமா திரைப்படத்தை தொடர்ந்து தர்மா, பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம் என பல தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் அதே சமயம் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
தருண் சினேகாவுடன் இவர் இணைந்து நடித்த "பிரியமான நீக்கு" திரைப்படம் தமிழில் "காதல் சுகமானது" என்ற பெயரில் வெளியாகி சக்கைபோடு போட்டு காதல் காட்சிகளில் இளசுகளின் மனதைப் பிழிந்து எடுத்தது. காதல் சுகமானது திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த நிலையில் இன்றுவரை பலரது பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது.

புகைப்படங்களை பகிர்ந்து
இவ்வாறு வெற்றி நாயகியாக வலம் வந்த பிரீத்தா விஜயகுமார் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்த பிரீத்தா ரசிகர்களுக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்வித்து வந்தார்.

அக்கவுண்ட்டை மீட்டுள்ளார்
இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராதவிதமாக இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் முடக்கப்பட்டு இருந்த நிலையில் " நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" என்றவாறு ஒரு வழியாக அந்த அக்கவுண்ட்டை மீட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
பல நாட்களாக இவரது பதிவுகளை பார்க்காத ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக "வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என அற்புதமான புகைப்படத்தை பதிவிட்டு, ஒருவழியாக எனது அக்கவுண்டை மீட்டு விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். பிரீத்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











