11 வருடங்களுக்கு முன் பறிபோன வாய்ப்பு.. தளபதி 67ல் விட்டதை பிடித்த பிரியா ஆனந்த்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67ல் கமிட்டாகி உள்ள பிரியா ஆனந்த், மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்.

தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வராதா என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, அடுத்தடுத்த அப்டேட்டுகளை இரண்டு நாட்களாக கொடுத்து இணையத்தையே திக்குமுக்காட வைத்துள்ளனர்.

அடுத்தடுத்த அப்டேட்டால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஆராயத் தொடங்கி உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி,மாஸ்டர்,விக்ரம் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நேற்று முன் தினம் அதிரடியாக அறிவித்தது. மேலும், இசையமைப்பாளர் அனிருத்,வசன கர்த்தாவாக லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன வேல் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றுவார்கள் என்று அறிவித்தது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒன்றாக அதிரடியாக வெளியிட்டது படக்குழு. இதில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், கௌதம் மேனன், இயக்குநர் மிஸ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி, பிரியா ஆனந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்.

தளபதி 67 படத்தில்

தளபதி 67 படத்தில்

தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த நடிக்க இருப்பதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, பிரியா ஆனந்த் தான் முதல் சாய்சாக இருந்தாராம் ஆனால், ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு பிரியா ஆனந்திற்கு கை நழுவி போனதாக கூறப்படுகிறது.

விட்டதை பிடித்த பிரியா ஆனந்த்

விட்டதை பிடித்த பிரியா ஆனந்த்

தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பதால் அம்மணி எல்லை இல்லாத மகிழ்ச்சியில் இருக்கிறார். பிரியா ஆனந்திற்கு தற்போது படவாய்ப்பு எதுவும் இல்லாததால், தளபதி 67 இவருக்கு நல்ல கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வாமனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பிரியா ஆனந்த் எதிர்நீச்சல், இரும்புத்திரை, வணக்கம் சென்னை, ஒரு ஊரில் இரண்டு ராஜகுமாரி, எல்கேஜி, ஆத்யா வர்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X