twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்... பிரியா ஆனந்த் பாராட்டு

    |

    கொச்சி : கேரளாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    முதல்கட்டமாக உடனடியாக ரூ.3,00,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

    முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு நடிகை பிரியா ஆனந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    பெற்றோரை இழக்கும் குழந்தைகள்

    பெற்றோரை இழக்கும் குழந்தைகள்

    கொரோனா ஏற்படுத்திவரும் பாதிப்பு சொல்லில் அடங்காதது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு தங்களுடைய சொந்தங்களை இழந்து வாடுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். கொரோனாவிற்கு ஒரே நேரத்தில் தங்களது பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளும் அதிகரித்து வருகிறது.

    கேரளா அரசின் நலத்திட்டங்கள்

    கேரளா அரசின் நலத்திட்டங்கள்

    இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். முதல்கட்டமாக அவர்களுக்கு 3,00,000 ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    கல்விச் செலவு

    கல்விச் செலவு

    மேலும் அவர்களது 18ம் வயதுவரை மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலும் அவர்களது கல்வி செலவையும் கேரள அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    பிரியா ஆனந்த் வரவேற்பு

    பிரியா ஆனந்த் வரவேற்பு

    இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை இணைத்து லவ் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார். இதேபோல இந்த அறிவிப்புக்களுக்கு திரைத்துறையினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Priya Anand likes the announcement made by Kerala CM Pinarayi Vijayan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X