For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்பத்தான் குளிச்சு எழுந்த ரோஜா போல.. எங்கே போய்ட்டீங்க பிரியா!

  |

  சென்னை : கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் நடிகைகளுக்கு மத்தியில் தமிழை அழகாக உச்சரிக்கும் நடிகை பிரியா ஆனந்த்.

  வாமனன் திரைப்படத்தின் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கிய பிரியா ஆனந்த், , பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் திறமையான நடிகை என்று பெயர் எடுத்தும் தனக்கான சரியான அங்கிகாரம் கிடைக்காமல் உள்ளார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

  பல்மொழி வித்தகியான பிரியா ஆனந்த் இன்னும் கூட ஆக்டிவாகத்தான் இருக்கிறார். இயற்கை அழகு ததும்பி வழியும் பிரியாவை உண்மையிலேயே தமிழ் ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள்.

   கனவிலும் நினைக்கவில்லை

  கனவிலும் நினைக்கவில்லை

  சென்னையில் பிறந்து வளர்ந்த பிரியா ஆனந்த், பள்ளிப்படிப்புக்கு பின்னர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ் பெற்ற அல்பெனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப்படிப்பு படித்தார். ஊடகத்துறையில் பணியாற்ற விரும்பிய பிரியா, நான் ஒரு நடிகையாக திரைத்துறையில் காலடி எடுத்துவைப்வேன் என கனவிலும் நினைத்துப்பார்க்க வில்லை என்று பல முறை கூறியுள்ளார்.

   சினிமா வாய்ப்புகள்

  சினிமா வாய்ப்புகள்

  படிப்பை முடித்து 2008ம் ஆண்டு சென்னை திரும்பிய பிரியா மாடலிங் துறையில் தனது தடத்தை பதித்தார். மாடலிங்க துறை அவரை சிவப்பு கம்மளம் விரிந்து வரவேற்றதால் பல பிரபலமான நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். விளம்பரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதால், இதைத் தொடர்ந்து அவருக்கு சினிமா துறையில் நுழைய நிறைய வாய்ப்புகள் வந்தன.

   பெயர் சொல்லவில்லை

  பெயர் சொல்லவில்லை

  வாமனன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் பிரியா ஆனந்த். அதைத் தொடர்ந்து புகைப்படம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த இருப்படங்களும் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. அடுத்ததாக நூற்றெண்பது படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெற்று அனைவருக்கும் தெறிந்த முகமானார் பிரியா ஆனந்த்.

   மெகா ஹிட்

  மெகா ஹிட்

  எதிர்நீச்சல் படத்தில் உண்மையில் எதிர் நீச்சல் போட்டது என்னமோ நம்ம பிரியா ஆனந்த் தான். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியா, தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கச்சிதமாக நடித்து இருப்பார். மேலும் இந்தபடத்தில் இடம் பெற்ற மின்வெட்டு நாளில் என்ற பாடல் மெகா ஹிட்டாகி அவரை அடுத்த வெற்றிக்கு அழைத்து சென்றது.

   திறமையானவர்

  திறமையானவர்

  வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊருல இரண்டு ராஜாகுமரி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, வங்காள தேசம், இந்தி, மராத்தி அனைத்து மொழிகளிலும் புகுந்து விளையாடும் திறன் படைத்தவர் பிரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கி வரும் இவர், நகைச்சுவை திரைப்படமான சுமோவில் நடித்து வருகிறார்.

   சேவ் தி சில்ட்ரன்ஸ்

  சேவ் தி சில்ட்ரன்ஸ்


  சுமோ படம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் கொரோனா காரணமாக படம் வெளியாவது தாமதமாகி உள்ளது. குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பிரியா ஆனந்த், சேவ் தி சில்ட்ரன்ஸ் என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்கான தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

  English summary
  Actress Priya Anand Roundup
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X