டாஸ்மாக் திறப்பு என்றதும் என் ரியாக்ஷன் இதுதான்.. போட்டோவை ஷேர் செய்து பங்கமாக்கிய பிரியா ஆனந்த்!

சென்னை: தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து நடிகை பிரியா ஆனந்த் தனது ரியாக்ஷன் இதுதான் என போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

CM MK Stalin விளக்கம்! TASMAC Reopen ஏன்? | Corona Lockdown | Oneindia Tamil

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆரம்பத்தில் சில தளர்வுகளுடனும் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஊரடங்கு அமலில் இருந்தது.

தளர்வுகள் அறிவிப்பு

தளர்வுகள் அறிவிப்பு

இதன் பலனாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

டாஸ்மாக் திறப்பு

டாஸ்மாக் திறப்பு

கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகளையும் மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளையும் 21 ஆம் தேதி வரை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

மேலும் அதிகரிக்கும்

மேலும் அதிகரிக்கும்

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சினிமா பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை திறந்தால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்னுடைய ரியாக்ஷன்

என்னுடைய ரியாக்ஷன்

இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் ஒரு போட்டோவை ஷேர் செய்து பங்கம் செய்துள்ளார். தான் செம ஹேப்பியாக சிரிக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள பிரியா ஆனந்த், டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அறிவித்ததும் என்னுடைய ரியாக்ஷன் இதுதான் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு

மேலும் கண்களை மூடியிருக்கும் குரங்கு, தலையில் அடித்துக்கொள்ளும் பெண் போன்ற ஈமோஜிகளையும் தனது கேப்ஷனுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக பேசிவிட்டீர்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X