அந்தகன் படத்தின் டப்பிங்கை ஆரம்பித்த பிரியா ஆனந்த்.. இயக்குநர் தியாகராஜன் எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை: நடிகர் பிரசாந்தின் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.
இந்த படத்தின் டப்பிங்கை ஆரம்பித்த நடிகை பிரியா ஆனந்த், இயக்குநர் தியாகராஜன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

டாப் ஸ்டார் பிரசாந்த்
இயக்குநர் ஷங்கரின் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி என ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்ட நடிகர் பிரசாந்த் மீண்டும் பக்காவான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

இந்தி பட ரீமேக்
ஏகப்பட்ட தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வரும் நிலையில், இந்தி படமான அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகின்றனர். அந்தகன் எனும் டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜனே இயக்கி வருகிறார்.

இயக்குநர்கள் மாற்றம்
முதலில் இந்த படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர், பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் பிரெடரிக் இந்த படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு அந்தகன் டைட்டில் எல்லாம் வெளியானது கடைசியில் சில பல காரணங்களுக்காக அவரும் மாற்றப்பட்டு தியாகராஜனே இந்த படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

மீண்டும் சிம்ரன்
ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், தமிழ் உள்ளிட்ட படங்களில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை சிம்ரன் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளார். ஆனால், ஜோடியாக அல்ல அதற்கு பதிலாக இந்தி அந்தாதூனில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வனிதா விஜயகுமார்
பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் இந்த படத்தில் மற்றொரு முக்கியமான ரோலில் நடிகை வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த் படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் அவர் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு படத்திற்கான புரமோஷன் வேலைகளை ஒரு பக்கம் பார்த்து வருகிறார்.

ராதிகா ஆப்தே ரோலில்
2018ம் ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தில் ஹீரோ ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். பிரசாந்த் - பிரியா ஆனந்த் பெயர் பொருத்தமே சூப்பராக இருக்கே என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன.

டப்பிங் ஆரம்பம்
அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகை பிரியா ஆனந்த் தனது போர்ஷன் டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். இயக்குநர் தியாகராஜன் உடன் அவர் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்படியே இருக்காரு
75 வயதாகும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் மலையூரு மம்பட்டியான் படத்தில் பார்ப்பது போலவே இன்னமும் திடகாத்திரமாக உள்ளாரே என இந்த போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஷாக் படத்தில் வந்ததை போல அவரும் கேமியோ ரோலில் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











