பேபி பம்ப் தெரிய... பிரியா அட்லீயின் கியூட் போட்டோஷூட்... வாழ்த்தும் பேன்ஸ்!
சென்னை : கோலிவுட்டில் க்யூட் கப்புளாக வலம் வந்து கொண்டு இருக்கும் இளம் தம்பதி அட்லி மற்றும் பிரியா அட்லீ ஜோடி.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியை பார்ப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும், அட்லீ எந்த வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனாலும் மனைவி பிரியாவை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பகால போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.

தரமான காதல் கதை
ராஜா ராணி என்ற தரமான காதல் கதையை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டார் அட்லீ. காதல் வயப்படுபவர்கள் யாரும் காதலித்தவர்களை மணப்பதில்லை. ஆனால், அந்த முதல் காதல் மனதின் ஆழத்தில் என்றும் இருக்கும் என்ற எதார்த்த காதலை ராஜா ராணி படத்தில் லாவகமாக சொல்லி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஷாருக்கானின் ஜவான்
முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்ற அட்லீ, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து பெயர் எடுத்துள்ளார். அட்லீ, தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

அழகான ஜோடி
கதை டிஸ்கஷன், படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அட்லீ எப்போதும் தனது மனைவி பிரியாவுடனே காணப்படுவார். இந்த லவ்வபில் ஜோடியை பார்க்கும் போது நமக்கே சற்று பொறாமை எட்டிப்பார்க்கும். ஜாலியா ஊர் சுற்றுவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் ஆட்டம் போட்டு ரீல் போடுவது என பிரியா எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகவே இருப்பார்.

கர்ப்பகால போட்டோஷூட்
8 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவாகி உள்ள பிரியா அட்லீ தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











