Priya Bhavani shankar: உள்ளாடை சைஸ் குறித்த கேள்வி.. ரசிகருக்கு பிரியா பவானி சங்கர் நெத்தியடி பதில்!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகையிலிருந்து முன்னேற்றம் பெற்று தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

இவரது கைவசம் அதிகமான படங்கள் உள்ளன. அடுத்தடுத்து இவரது படங்கள் ரிலீசாகி வருகின்றன. நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

மிகவும் குடும்பப் பாங்கான ரோல்களில் நடித்துவந்த பிரியா பவானி சங்கர், தற்போது கிளாமரிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான பத்து தல படத்தில் கௌதம் கார்த்தியுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

Actress Priya bhavani shankar Angry on Fans question on her inner size

உள்ளாடை சைஸ் குறித்த கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த பிரியா பவானி சங்கர்: நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகத்தான் தன்னுடைய கேரியரை துவங்கினார். தொடர்ந்து சின்னத்திரை சீரியலிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். திருமணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர், அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேயாத மான் என்ற படம்தான் இவருக்கு என்ட்ரி கொடுத்தது. முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்த நாயகியாக மாறினார்.

தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துவரும் நாயகியாக மாறியுள்ளார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து கமல்ஹாசன், கார்த்தி, ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, அருண் விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் யானை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் என நான்கு படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு 6 மாதத்திற்குள்ளாகவே ஜெயம் ரவியுடன் அகிலன், சிம்புவுடன் நடித்த பத்து தல, ராகவா லாரன்சுடன் நடித்த ருத்ரன், எஸ்ஜே சூர்யாவுடன் நடித்த பொம்மை போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2, அருள்நிதியுடன் டிமான்டி காலனி போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் ரிலீசாகவுள்ளன. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து பல்வேறு போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் செஷனில் பங்கேற்றிருந்தார் பிரியா பவானி சங்கர்.

Actress Priya bhavani shankar Angry on Fans question on her inner size

அப்போது ரசிகர் ஒருவர், பிரியா பவானி சங்கரின் உள்ளாடை சைஸ் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், 34டி தான் சகோதரரே என்றும் மார்பகங்களை தான் வேற்று கிரகத்தில் இருந்து பெறவில்லை என்றும் பதிலடி கொடுத்தார். மேலும் உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு என்றும் ஜூம் செய்து பார்த்தால் அதன் சைஸ் தெரியும் என்றும் அதற்கு வாழ்த்துக்கள் என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

இதுபோன்ற சமூக வலைதளப்பக்கங்களில் கேள்வி பதில் செஷனில் அடிக்கடி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர். ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்படும் இத்தகைய செஷன்களில், வித்தியாசமாக கேள்விகளை அடுக்குகிறோம் என்ற போர்வையில், நடிகர்களின் அந்தரங்கங்கள் குறித்து இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒருசிலர் அதை நாசுக்காக தவிர்த்து விடுகின்றனர். ஒருசிலர் இதுபோன்ற பதில்களால் ரசிகர்களை அலறவிடுகின்றனர். இதுபோன்ற கேள்விகளை பில்டரில் நீக்கும் வழிமுறைகளை சமூக வலைதளங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X