மகாராணி போல ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்.. ரசிகர்களுக்கு சிறப்பு தரிசனம்!
சென்னை : முதல் முறையாக கேங்ஸ்டர் டானாக சிம்பு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இந்தியன் 2, ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம் என அடுத்தடுத்து மிகப் பெரிய படங்கள் இவருக்கு வெளியாக இருக்க மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கலக்க உள்ள பிரியா பவானி சங்கர் இப்பொழுது மகாராணி போல ஜொலிக்கும் கெட்டப்பில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்து வைரலாகி வருகிறார்.

வாய்ப்புகள் எக்கச்சக்கமாக
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல கோடி ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் ரசிகர்களின் ட்ரெண்டிங் குயினாக இருந்து வருகிறார். இளம் நடிகையான இவருக்கு வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்து வரும் நிலையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வைக்கவும் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஹரி இயக்கி வருகிறார்
கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 மற்றும் சிம்புவின் பத்து தல உள்ளிட்ட எதிர்பார்ப்பில் உருவாகும் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் அருண் விஜய்யுடன் இணைந்து மீண்டும் சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வர இதை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். அருண்விஜய் பிரியா பவானி சங்கர் ஏற்கனவே மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குருதி ஆட்டம்
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர அங்கும் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கவர்ச்சி காட்டாமலேயே எக்கச்சக்கமான படங்களை கைவசம் வைத்திருக்க பொம்மை, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, ருத்ரன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக தயாராக உள்ளது.

இந்திரலோகத்து சுந்தரியே
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தில் தாசில்தார் வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் விதவிதமான போட்டோஷூட்டிலும் மிரட்டி வருகிறார். அந்த வகையில் சாதாரணமாகவே பார்க்க கொள்ளை அழகில் ராணி போல இருக்கும் பிரியா பவானி சங்கர் இப்பொழுது மகாராணி கெட்டப்பில் வசீகரிக்கும் எக்கச்சக்க அழகுடன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்திருக்க பலரும் இந்திரலோகத்து சுந்தரியே என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











