என் அம்மாவுக்கு கேன்சர்..மேடையில் கண்கலங்கி அழுத நடிகை பிரியா பவானி சங்கர்!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர், தனது அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது குறித்து கண்கலங்கி பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்களின் படங்களில் லீடு ரோலில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார்

தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Actress Priya Bhavani Shankar has opened up about her mothers cancer

பிரியா பவானி சங்கர்: சின்னத்திரையில் இருந்து வந்த பிரியா பவானி சங்கருக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆண்டில் அதிகமான படங்களில் நடித்த நடிகையாக பிரியா பவானி சங்கர் இருக்கிறார்.ஜெயம் ரவியுடன் அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை என அடுத்தடுத்த படங்களில் நடித்து உள்ளார். அண்மையில் இவர் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று, கணிசமான வசூலை பெற்றது.

இந்தியன் 2: தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்களின் படங்களில் லீடு ரோலில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உலக ரோஜா தினம்: இந்நிலையில், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்கவும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் அப்பல்லோ புற்றுநோய் சென்டர் சார்பில் கொண்டாடப்பட்ட உலக ரோஜா தின நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் உருக்கமாக பேசினார்.

Actress Priya Bhavani Shankar has opened up about her mothers cancer

நெகிழ்ச்சி: கடந்த ஆண்டு தனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதாகவும், அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டினார். எனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதும் சீக்கிரம் சரியாகிவிடும் என அவரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன். இங்கு வந்திருந்த நிறைய பேர் அவர்களின் அனுபவங்களை சொன்னது ஊக்கமளிப்பதாக இருந்தது என நெகிழ்ச்சி உடன் தெரிவித்தார்.

கேன்சர்: என் அம்மாவுக்கு கேன்சர் கண்டறியப்பட்டபோது டாக்டர் என்னையும் பரிசோதனை செய்துகொள்ள சொன்னார்கள். கேன்சரால் என் அம்மாவை நான் இழக்க விரும்பவில்லை என்றும், மருத்துவர்களை நம்புங்கள் எனவும் அங்கு வந்திருந்த கேன்சர் பாதிப்பு உடையவர்களுக்கு பிரியா பவானி சங்கர் ஊக்கம் அளித்தார். மேலும் தனது தாய் பற்றி பேசுகையில் எமோஷனல் ஆன பிரியா பவானி சங்கர், மேடையிலேயே கண்ணீர் சிந்தியது காண்போரை கலங்க செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X