Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹாலோ பிரதர்… எது முட்டாள்தனமான வாதம்… கிண்டலடித்தவருக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர், முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதற்கு நெட்டிசன் ஒருவர், பிரியா பவானி சங்கரை தாறுமாறாக கிண்டலடித்து பதிவிட்டு இருந்தார்.
தீபிகா படுகோனே தந்தை மருத்துவமனையில் அனுமதி.. அம்மா மற்றும் சகோதரிக்கும் கொரோனா உறுதி
ட்விட்டரில் கிண்டலத்த அந்த நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்
வாழ்த்து
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை வென்று , தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். நடிகை பிரியா பவானி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
|
சிறப்பாக வழி நடத்துவீர்கள்
அதில், நீண்ட காலத்துக்குப்பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு, பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.
|
எந்த சட்டமும் கிடையாது
பிரியாபவானி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, அவரது ரசிகர் ஒருவர், சகோதரி முதல் வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம். 2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்ததால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது என்று பிரியா பவானி சங்கரை நக்கலடித்து பதிவிட்டு இருந்தார்.
சரியான பதிலடி
நெட்டிசனின் இந்த நக்கலான பதிவிக்கு பதிலளித்து உள்ள பிரியாபவானி சங்கர், take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir. மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை என பொட்டில் அடித்தது போல காட்டமான பதில் அளித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.