சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பிரியா பவானி சங்கர் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை : சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து தொடர்ந்து பலரும் கருத்துக்களை தங்களது அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரம் உள்ளதாக சின்னத்திரை நடிகைகளும் சமீபத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
வளர்ந்த நடிகை, புதிதாக சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் என யாரும் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்டில் இருந்து தப்ப முடியாது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்
சினிமாவில் முன்னணி நாயகியாக மாறுவதற்கு பல நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களில் இந்தக் கலாச்சாரம் மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதனும் தொடர்ந்து முன்னணி நடிகைகளின் இந்த கலாச்சாரம் குறித்து பகிரங்கமாக பெயரை குறிப்பிட்டே தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.

நடிகைகள் வெளிப்படை
அவரது இந்த பகிர்வுகளுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தபோதிலும் அவர் அடங்குவதாக இல்லை. இந்நிலையில் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாகவே தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். முன்னணி நடிகைகள் முதல் தற்போதுதான் பீல்டில் என்ட்ரி கொடுப்பவர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை. சீரியல் நடிகைகளும் தாங்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சினிமாவில் சான்ஸ்
முதல் படத்தில் ஆடிஷன் போன்றவற்றை முடித்தாலும் கடைசியில் அவர்கள் எதிர்கொள்வது இந்த அட்ஜெஸ்ட்மெண்டைதான். முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தாலும் இரண்டாவது படத்தில் சான்ஸ் பெறுவதற்கு அவர்கள் இதை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனாலேயே பல நடிகைகள் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடன் பீல்ட் ஆகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளை நடிகை தேவிப்பிரியா வெளிப்படுத்திய நிலையில், அடுத்ததாக நயன்தாராவும் இதுகுறித்து தன்னுடைய அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பிரியா பவானி சங்கர்
இந்நிலையில் தற்போது அதிகமான படங்களில் நடித்துவரும் பிரியா பவானி சங்கரிடமும் இதுகுறித்து கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரத்தில் வெளிப்படையாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். தான் தொலைக்காட்சியில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போதுவரை யாரும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்டில் சிக்காத பிரியா பவானி சங்கர்
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள பிரியா பவானி சங்கர், தான் அந்த பிரச்சினையில் சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தனக்கு நண்பர்கள் அதிகமாக இருந்தபோதிலும் யாரும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2017ம் வெளியான மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











