கத்து கொடுத்ததே நீங்கதான் சார்.. ப்ளீஸ் இதை செய்யுங்க - கௌதம் மேனனுக்கு ப்ரியா பவானி சங்கர் கோரிக்கை

சென்னை: பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு நடிகை ப்ரியா பவானி சங்கர் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சிம்பு ரசிகர்களின் தொடர் வலியுறுத்தலின்பேரில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தனது எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் சிம்புவை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

 அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சிம்பு

அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சிம்பு

தனது ரீ என்ட்ரியில் மாநாடு மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான அந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலித்தது. அதற்கு அடுத்ததாக கௌதம் மேனனுடன் இணைந்த வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அடுத்தடுத்து சிம்பு கொடுத்திருக்கும் ஹிட்டால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கின்றனர்.

பத்து தல சிம்பு

பத்து தல சிம்பு

தனது இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக இருக்கும் என்று சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமானது மார்ச் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழா

ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதற்கான விழா சென்னையில் பிரமாண்டமாக நேற்று நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதனை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். மேலும், சிம்பு இதேபோல் நடித்தால் போதும் என நிம்மதியும் அடைந்துள்ளனர்.

கௌதம் மேனனுக்கு ப்ரியா பவானி சங்கர் கோரிக்கை

கௌதம் மேனனுக்கு ப்ரியா பவானி சங்கர் கோரிக்கை

விழாவில் கலந்துகொண்ட ப்ரியா பவானி சங்கர் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்டோரை புகழ்ந்து பேசினார். தொடர்ந்து கௌதம் மேனன் குறித்து பேசுகையில், "இயக்குனர் கௌதம் மேனன் மதிப்புமிக்கவர். அவர் நடிப்பில் படங்கள் வெளியாகும்போது, இப்படி நடிக்கிறாரே அய்யோ இவர் படம் இயக்குவதை விட்டுவிடுவாரா என பயமாக இருக்கும் வரும் தலைமுறைக்கே காதலிக்க கத்துக் கொடுத்தவர். யார வச்சு கத்துக் கொடுத்தாரோ அவரும் இங்கேதான் இருக்கார். கௌதம் மேனன் சார் நீங்க இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டும்" என்றார்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய சிம்பு

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய சிம்பு

பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பலரும் பார்த்து வியந்தது சிம்புவை. விண்டேஜ் சிம்புவாக மாறிய அவர், லூசு பெண்ணே பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடினார். மேலும் இந்த முறை வேறு மாதிரி வந்திருக்கிறேன். இனி விடமாட்டேன் எனவும் மேடையில் ரசிகர்கள் மத்தியில் சூளுரைத்தார். இதனை பார்த்த பலரும் பழைய சிம்பு வந்துவிட்டார் என வைப் ஆகி கொண்டாடி தீர்த்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X