Priya with lover :காதலருடன் கட்டிப் பிடித்து வீடியோ வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. க்யூட் போட்டோஸ்!

சென்னை : நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ளவர்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பத்து தல படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படுகிறார்.

Actress Priya bhavani shankar shared photos and videos with her lover

காதலருடன் நெருக்கமாக புகைப்படங்கள் வெளியிட்ட பிரியா பவானி சங்கர் : நடிகை பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின்மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, திருச்சிற்றம்பலம், பத்து தல உள்ளிட்ட படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுடன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதுடன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் ஏராளமான பாலோயர்களையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தன்னுடைய காதலர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கொண்டாட்டத்துடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். க்யூட்டான பாடலுடன் அவர் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Priya bhavani shankar shared photos and videos with her lover

இந்த புகைப்படங்களில் அவர் தனது காதலருடன் கட்டி அணைத்தபடி இருக்கும் காட்சிகளும் காணப்படுகின்றன. அவருடன் கட்டி அணைத்தபடி, அவரை முதுகில் ஏற்றியபடியும், கத்தி வீசியபடியும் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகிறார். மேலும் உல்லாசமாக சுற்றியபடியும் விதவிதமான உணவுகளை சாப்பிடும்படியாகவும் காணப்படுகிறார். ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும்படியும் உள்ளார்.

பிரியா பவானி சங்கரின் நடிப்பில் மேயாத மான் முதல் படம் கடந்த 2017ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து இவரது நடிப்பில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் சிம்புவுடன் இணைந்து ருத்ரன் மற்றும் மேயாத மான் படங்களில் நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் தன்னுடைய காதலர் ராஜவேலுடன் இணைந்து இவர் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். இந்த சுற்றுலாவின் புகைப்படங்களைத்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். முன்னதாக ராஜவேலுவுடன் இவருக்கு பிரேக் அப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X