ரஜினி, கமல் நடிச்சா மட்டும் படம் ஓடுமா? பிரியா பவானி சங்கர் பேச்சு!

சென்னை: அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த 'டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரியா பவானி சங்கர், சினிமா என்பது ஒரு ஆள் சம்மந்தப்பட்ட விஷயம் இல்ல, ரஜின், கமல் நடிச்சா மட்டும் தான் படம் ஓடுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், 27 வருடத்திற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் பல கட்ட பிரச்சனைக்கு பின் வெளியானது. ஆனால், படத்தின் திரைக்கதையை ஷங்கர் கோட்டை விட்டுவிட்டார் என்ற படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

Priya Bhavani Shankar arul nithi demonte colony 2 2

பிற்போக்குத்தனமா இருக்கு: படத்தில் அனைத்து நடிகர்கள் நடித்த நிலையில், பிரியா பவானி சங்கரை மட்டும் குறிப்பிட்டு, அவர் நடித்த எந்த திரைப்படங்களும் சரியாக ஓடுவதில்லை என்றும், இவர் ராசி இல்லாத நடிகை என்று மீம்ஸ் மூலமாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேசிய இவர், சினிமா என்பது ஒரு ஆள் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை, ரஜினி,கமல் நடிச்சா மட்டும் ஒரு படம் ஓடாது. மேயாத மான் ஹிட்டான போது அது என்னாலத்தான் ஓடுச்சுனு யாரு சொல்ல, ஒரு படம் உங்களுக்கு பிடிக்கலனா சாரி, ஆனால், 1000 பேர் சேர்ந்து வேலை பார்க்கிற ஒரு படம், ஒரு ஆளாள பிளாப் ஆயிடுச்சினு சொல்றது ரொம்ப பிற்போக்குத் தனமான விஷயமாக இருக்கு என்றார்.

கஷ்டமா இருக்கு: இதற்கு முன் இதே விஷயம் குறித்து பேசி இருந்த பிரியா பவானி சங்கர், சோஷியல் வரும் விமர்சனத்தை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும், எல்லோரும் மனுஷங்கதான். உங்களை கஷ்டப்படுத்துகிற மாதிரி பேசினால் உங்களுக்கு எப்படி கஷ்டமாக இருக்குமோ அதுபோலத் தான் நடிகர்களுக்கும் கஷ்டமாக இருக்கும். படத்தை பற்றி வரும் விமர்சனத்தை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்ல, ஆனால் அது நெகட்டிவ்வாக இருந்தாலும் பாசிட்டிவ்வாக இருந்தாலும் அது விமர்சனம். அதை ஏற்றுக்கொண்டால்தான் வளர முடியும். ஆனால் டிஜிட்டல் மீடியாவில் முகமே தெரியாதவர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது கஷ்டமாக இருக்கிறது என்றார்.

டிமாண்டிகாலனி 2: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் அருண் பாண்டியன், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள டிமான்டி காலனி பாகம் 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, அதன் முதல் பாகம் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை படக்குழு தயாரித்துள்ளது. ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த படம் தயாரிக்கப்பட்டு வெளியாக இருக்கின்றது திரைப்பட குழு ப்ரோமோஷன் வேலைகளை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X