Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த வயசுலேயே ஏம்மா இப்படி.. கமலுக்காக ரிஸ்க் எடுக்கும் பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படத்திற்காக பிரபல நடிகை ஒருவர் பெரும் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல்அகர்வால், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
கமலுக்கு ஜோடி
இந்நிலையில் படத்தில் பிரியா பவானி ஷங்கரின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் வயதான கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
வயதான ரோல்
இந்தியன் படத்தில் நடிகை சுகன்யா இந்த ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் வயதான கேரக்டருக்கு தேர்வாகியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.
ரசிகர்கள் பயம்
தற்போதுதான் பிரியா பவானி ஷங்கரின் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அவர் வயதான கேரக்டரில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரச்சனை இல்லை
வயதான கேரக்டரில் நடிப்பது பெரிய ரிஸ்க், ஒரு வேளை இதுவே டிராபேக்காக அமைந்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் ஷங்கர் மற்றும் கமல் சாருக்காக இவ்வாறு நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.
துணிச்சல்
இந்த வாய்ப்பு கிடைத்ததை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட கோலிவுட்காரர்கள் அம்மணிக்கு துணிச்சல் ஜாஸ்திதான் என தெரிவித்து வருகின்றனர்.