சன்னி லியோனுடன் நடிக்கிறேன்...சதீசை கலாய்த்த பிரபல நடிகை

சென்னை : தமிழ் காமெடி நடிகரான சதீஷ் முத்துகிருஷ்ணன், தனது அடுத்த படத்தில் சன்னி லியோனுடன் நடிக்க உள்ளார். இந்த தகவலை சதீஷ், மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜை ஃபோட்டோவுடன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சதீஷ் பதிவிட்டுள்ள கேப்ஷனில், காமெடி கலந்த வரலாற்று பேய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் சன்னியுடன் நடிக்கிறேன். இன்று முதல் படப்பிடிப்பை துவங்கி உள்ளேன். கடவுள் மற்றும் சினிமா ரசிகர்கள் எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சதீஷின் இந்த பதிவில் அனைவரையும் கவர்ந்தது அவர் சன்னி லியோனுடன் நடிக்கிறார் என்ற தகவல் தான். இது சதீஷ் மற்றும் சன்னி லியோனின் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Actress Priya Bhavani Shankar trolled Sathish on Twitter

இந்த பதிவிற்கு கீழ் இருக்கும் கமெண்ட்ஸ் பகுதி முழுவதும் ஹார்ட் எமோஜியால் நிரம்பி உள்ளது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.

Actress Priya Bhavani Shankar trolled Sathish on Twitter

சதீஷின் இந்த பதிவிற்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளன கருத்தில், என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என குறிப்பிட்டுள்ளார்.

சதீசை கலாய்த்து பிரியா பவானிசங்கர் வெளியிட்டுள்ள இந்த பதிவை ரசிகர்கள் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, கருத்து பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X