Priya Bhavani Shankar: அவர் டைரக்ஷனா.. கேள்வியே இல்லை.. உடனே ஓகேதான்.. பிரியா பவானி சங்கர் கூல்!

சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து தற்போது பிசியான நாயகியாக காணப்படுகிறார்.

இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிப்படங்களாகி வருகின்றன. சமீபத்தில் இவரது நடிப்பில் பத்து தல உள்ளிட்ட படங்கள் ரிலீசாகியுள்ளன.

இன்றைய தினம் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பொம்மை படம் ரிலீசாகியுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

Actress Priya bhavani shankar wants to act Director Vetrimaaran direction without any questions

வெற்றிமாறன் இயக்கத்தில் இணைய பிரியா பவானி சங்கர் விருப்பம்: நடிகை பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார். இந்த சீரியலே பிரியா பவானி சங்கருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. மேயாத மான் என்ற படத்தில் நடித்த இவர், உடனடியாக கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அமைதியான இயல்பான நடிப்பு இவரது கேரக்டர்களிலும் பிரதிபலித்து வருகிறது. இவரது இயல்புக்கு ஏற்றாற் போலவே இவரது கேரக்டர்களும் அமைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டிலேயே இவரது நடிப்பில் பத்து தல, அகிலன், ருத்ரன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் எஸ்ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள பொம்மை படம் ரிலீசாகியுள்ளது.

சைக்காலஜிகல் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான வரவேற்பை முன்னதாக ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

Actress Priya bhavani shankar wants to act Director Vetrimaaran direction without any questions

அடுத்ததாக விஷால் -இயக்குநர் ஹரி இணையும் புதிய படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஜோடியாக யானை படத்தில் நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் பொம்மை படத்தின் பிரமோஷனையொட்டி பேசிய அவர், தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரித்துள்ளார். அவருடைய இயக்கம் என்றால் கதைகூட கேட்காமல் நடிக்க உடனடியாக ஓகே சொல்லிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல முன்னதாக எஸ்ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்திருந்த மான்ஸ்டர் படம் அவருக்கு சிறப்பான நாயகி அந்தஸ்தை கொடுத்திருந்த நிலையில், மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்திலும் கதை கேட்காமல் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். ஹோம்லி கேரக்டர்களில் சிறப்பாக பொருந்தி வருகிறார் பிரியா பவானி சங்கர். ஆனால் சமீபத்தில் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுக்கவும் அவர் தயங்குவதில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X