தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்… பிரியா பவானி சங்கர் ட்வீட் !
சென்னை : பணக்காரர்கள், ஏழைகள், என இது யாருக்கும் ஏற்படலாம், தயவுசெய்துபாதுகாப்பாக இருங்கள் என்று நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
அருண்ராஜா காமராஜ் தனது மனைவி சிந்துவை கொரோனாவால் உயிரிழந்தார் இதற்கு பிரியா பாவனி சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல திரைப்பிரபலங்கள் கொரோனாவாலும், மாரடைப்பாலும் உயிரிழந்த வருவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

நல்ல வரவேற்பு
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில நடிகையாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் ப்ரியா பவானி ஷங்கர். அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதற்கு பிறகு அவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

பல படங்கள்
தமிழ் சினிமாவில்மிக வேகமாகவளர்ந்து வரும்நடிகையாக மாறிக்கொண்டிருக்கிறார் பிரியாபவானி சங்கர். நடிகர்கள் முதல்தயாரிப்பாளர்கள் வரை தங்களுடையபடங்களில் பிரியாபவானி சங்கரைநடிக்க வைக்கஆர்வம் காட்டிவருகின்றனர். தற்போது இவர், ஓ மணப்பெண்ணே, குருதியாட்டம், பொம்மை, ஹாஸ்டர் என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Recommended Video

சிந்துஜா உயிரிழந்தார்
இந்நிலையில், நேற்று,பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட அருண்ராஜா காமராஜ் தனது மனைவி சிந்துவை கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பாதுகாப்பாக இருங்கள்
இதுகுறித்து, தனதுட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ள, பிரியா பவானி சங்கர், இது மிகவும் வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது. இப்படி ஒரு சோகமான முடிவு நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், என இது யாருக்கும் ஏற்படக்கூடும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். இப்படி ஒன்று நடந்திருக்கவே கூடாது.அருண்ராஜாவுக்கு வலிமையும் தைரியமும் கொடுக்க இறைவனை பிராத்திக்கிறேன் என பிரியா பவானி சங்கர் மிகுந்த வேதனையுடன் அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











