ஐரா இயக்குநருடன் மிரட்டல் படத்தில் இணையும் பிரியா பவானிசங்கர்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகை பிரியா பவானிசங்கர் ஐரா பட இயக்குநரின் படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

மற்ற நடிகைகளை காட்டிலும் அதிக படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் பிரியா பவானிசங்கர் புதிய படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லீடிங் ரோலில்

லீடிங் ரோலில்

அதாவது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த த்ரில்லர் அன்ட் ஹாரர் படமான ஐரா படத்தை இயக்கியவர் சர்ஜூன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சர்ஜூன் இயக்கும் புதிய படத்தில் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளாராம் பிரியா பவானிசங்கர்.

டிவி ரிப்போர்ட்டராக

டிவி ரிப்போர்ட்டராக

ஒரு கொலை சம்பவத்தை சுற்றி கதையாக்கப்படும் இந்தப் படத்தில் பிரியா பவானிசங்கர், டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறார். வீடியோ ஃபுட்டேஜை வைத்து கொலைக்காரனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

மெட்ரோ சிரிஷ்

மெட்ரோ சிரிஷ்

பிரியா பவானி சங்கர் மெயின் ரோலில் நடிக்கும் முதல் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மெட்ரோ சிரிஷ் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இர்ஃபான் மாலிக் மற்றும் யுவன் சங்கர்ராஜா இணைந்து தயாரிக்கின்றனர்.

அருண் விஜய்யுடன்

அருண் விஜய்யுடன்

பிரியா பவானிசங்கர் தற்போது ராகவா லாரன்ஸுட்ன் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆடுகளம் படத்தின் தயாரிப்பாளரான கதிரேசன் இயக்குகிறார். இதனை தொடந்து ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு ஹரி இயக்கும் அருண்விஜய்யின் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: priya bhavani shankar sarjun
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X