இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. பட்டுன்னு சொல்லிடுங்க.. காதலில் விழுந்த ரசிகர்.. நடிகை பளீச்!
சென்னை: தன்னை காதலிப்பதாக கூறிய ரசிகருக்கு உச்சி குளிரும்படி பதில் அளித்துள்ளார் நடிகை பிரியா பவானிசங்கர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர் பிரியா பவானிசங்கர்.
வளரும் இளம் நடிகையான பிரியா பவானிசங்கர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமூகம் சார்ந்த கருத்து
அவ்வபோது சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் பிரியா பவானிசங்கர் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.

உச்சி குளிர செய்துள்ளார்
மேலும் தன்னை விமர்சிக்கும் நெட்டிசன்களையும் விளாசி வருகிறார் பிரியா பவானிசங்கர். இந்நிலையில் நடிகை பிரியா பவானிசங்கர் ரசிகர் ஒருவரின் பதிவை ஷேர் செய்து அவரை உச்சி குளிர செய்துள்ளார்.

இதயம் முரளி போல்
அதாவது ரசிகர் ஒருவர், மேயாத மான் படம் பார்த்த பிறகு அடுத்த 5 செகண்டுகளுக்கும் என கையில் மைக்குடன், இதயம் முரளி போன்று ஆகி விடுவதாகவும், தான் பிரியா பவானிசங்கருடன் காதலில் விழுந்துவிட்டதாக நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

அப்படி இருக்க வேண்டாம்
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியா பவானிசங்கர், ஹார்ட்டின் ஈமோஜிகளை ஷேர் செய்து நீங்கள் என்னை டேக் செய்து தெரியப்படுத்தலாம். இதயம் முரளி போன்று இருக்க வேண்டாம்.. உங்களின் அன்புக்கு நன்றி கய்ஸ் என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை பிரியா பவானிசங்கர்.

யூ மேட் மை டே
அதனை பார்த்த அந்த ரசிகர், ரிப்ளை செய்ததற்கு நன்றி நீங்கள் என் நாளை சிறந்ததாக்கி விட்டீர்கள். லவ் யூ சோ மச் என பதிவிட்டு ஹார்ட்டின்களையும் ஷேர் செய்துள்ளார்.
Recommended Video

பூ மஞ்சம் போராடுதே
பிரியா பவானிசங்கரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், ஐ லவ் யூ என பதிவிட்டு வருகின்றனர். இந்த நெட்டிசன்,
ஹே ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..
இதுதான் மாலை விருந்து
மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
காதோரம் மெல்ல கூறும் சேதி
தேன் போலே பாயாதோ
நீராடும் வண்ண பூவும் நாளை
பூமஞ்சம் போராடுதோ.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











