அப்படி சொல்லாதீங்க கோபால்.. பிரபல நடிகரை செம கலாய் கலாய்த்த பிரியா பவானிஷங்கர்!
சென்னை: தன்னை கலாய்த்த பிரபல நடிகரை பதிலுக்கு பங்கம் செய்துள்ளார் நடிகை பிரியா பவானிஷங்கர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானிஷங்கர்.
ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர். இதேபோல் ஹரி இயக்கும் படத்திலும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானிஷங்கர்.

போட்டோக்கள் வீடியோக்கள்
கைவசம் பல படங்களை வைத்துள்ள பிரியா பவானிஷங்கர், சமூக வலை தளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

என்ன யோசிக்கிறேன்?
அந்த வகையில் பிரியா பவானிஷங்கர் அண்மையில் கோல்டன் நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த பிரியா பவானிஷங்கர், நான் என்ன யோசிக்கிறேன் என்று சொல்லுங்கள் என கூறி கேப்ஷன் கொடுத்திருந்தார்.

பிரியா பதில்
அதனை பார்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ், சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே என்று கிண்டலாக கமெண்ட் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சதீஷின் அந்த டிவிட்டுக்கு பதில் அளித்துள்ளார் பிரியா பவானிஷங்கர்.

சொல்லாதீங்க கோபால்..
அதாவது சதீஷ் லேடி கெட்டப்பில் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியா, அப்படி சொல்லாதீங்க கோபால் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
ரெண்டு போட்டோக்கும் சோடி
பிரியா பவானி ஷங்கரின் இந்த பதிவுக்கும் பதில் அளித்துள்ள சதீஷ், சோடி போட்டுக்கலாமா சோடி.. ரெண்டு போட்டோக்கும் சோடி.. என பதிலுக்கு கலாய்த்துள்ளார். அதற்கு பதில் கூறியுள்ள பிரியா பவானிஷங்கர் என் தோல்வியை ஒத்துக்றேன் என பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவையும் பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











