For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சந்தோஷமா போய்ட்டு வாங்க.. உங்க அம்மாவோட தோட நான் பாத்துக்குறேன்.. தாத்தா மறைவுக்கு நடிகை இரங்கல்!

  |

  சென்னை: நடிகை பிரியா பவானிசங்கர் தனது தாத்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

  பிரியா பவானிசங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார்.

  செம டெவலப்மென்ட்.. மோனோகினியில் போஸ் கொடுத்த யாஷிகா.. அப்படி டவுட் கேட்கும் நெட்டிசன்ஸ்! செம டெவலப்மென்ட்.. மோனோகினியில் போஸ் கொடுத்த யாஷிகா.. அப்படி டவுட் கேட்கும் நெட்டிசன்ஸ்!

  சினிமா, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

  தாத்தா குறித்த பதிவு

  தாத்தா குறித்த பதிவு

  அந்த வகையில் தற்போது தனது தாத்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில் அவரது தாத்தா குறித்தும் தாத்தாவுடனான தனது ரிலேஷன்ஷிப் குறித்தும் கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,

  பெருமையா வாழ்ந்தவர்

  பெருமையா வாழ்ந்தவர்

  "தாத்தா! ஒரு வெற்றி பெற்ற தொழில் அதிபர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

  நான் தாத்தாவோட ஃபேவரைட்லாம் இல்ல. In fact odd person outனு கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது' category நாம.

  நாய் குட்டி மாதிரி

  நாய் குட்டி மாதிரி

  10வது வரை ஸ்கூல் லீவு விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள்,கைகள்,கால்கள்,எங்க மண்டைகள்னு உடையாத ஐட்டம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு juvenile குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

  ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா ஃபுல் டிசிப்ளின் தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை tv இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த Door வச்ச tv..

  பாட்டிதான் ராக்ஸ்டார்

  பாட்டிதான் ராக்ஸ்டார்

  பெப்ஸி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த ஷோக்கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான். இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல.

  போன வாரம் கடைசியா

  போன வாரம் கடைசியா

  நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட,மெடிக்கல் காலேஜ் போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார்.

  நீ வச்சுக்கோன்னு கொடுத்தார்

  நீ வச்சுக்கோன்னு கொடுத்தார்

  எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா என்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு என் அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார். நாம் நினைத்து பார்க்கக்கூடியதை விடவும் விலை மதிப்பு மிக்கது அது. ஒருமுறை நான் அந்த முதியவரால் மதிக்கப்படுவதையும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் உணர்ந்தேன்.

  சந்தோஷமா போய்ட்டு வாங்க

  சந்தோஷமா போய்ட்டு வாங்க

  உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க".. இவ்வாறு நடிகை பிரியா பவானிஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  Read more about: priya bhavanishankar
  English summary
  Actress Priya Bhavanishankar condolence note for her grandfather goes viral. Priya Bhavanishankar Grandfather passed away yesterday.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X