யோகி பாபுவுக்கு அன்பை அள்ளிக்கொடுத்த பிரியா பவானிசங்கர்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: நடிகை பிரியா பவானிசங்கர் பிரபல நடிகரான யோகி பாபுவுக்கு அன்பை வாரி வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் மண்டேலா திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

யோகி பாபு ரோல்
முடி திருத்தும் தொழிலாளியை மோசமாக நடத்தும் கிராம மக்கள் அவருடைய ஒரு ஓட்டுக்காக அவரை படுத்தும் பாடுதான் மண்டேலா படத்தின் கதை. இந்தப் படத்தில் யோகிபாவு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நெட்ஃபிலிக்ஸ்
ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜார்ஜ் மரியான், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் இப்படம் வெளியானது.

நடிகை பாராட்டு
இப்படத்தை மடோனா அஷ்வின் இயக்கியிருந்தார். பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டினர். இந்நிலையில் இப்படத்தை பிரபல நடிகையான பிரியா பவானிஷங்கர் பாராட்டி டிவிட்டியுள்ளார்.

அன்பை வாங்கிக்கோங்க..
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் #Mandela மடோனா அஷ்வின், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, யோகி பாபுணா! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார்.

அருமையான படம்
பிரியா பவானிஷங்கரின் இந்த பதிவை பார்த்த பலரும் படத்தை பாராட்டியுள்ளனர். இது மிகவும் அருமையான படம் இன்றைய ஊா் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய பிரதிபலிப்பு.. யோகி பாபுவின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த படம் இது.. என பாராட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











