ஆமாங்க ஐயா.. ஒரே பதட்டமா இருக்கு.. விமர்சித்த நெட்டிசனை விளாசித் தள்ளிய கார்த்தி பட நடிகை!

சென்னை: தன்னை விமர்சித்த நெட்டிசனை பிரபல நடிகை விளாசி பதிவிட்டிருக்கும் டிவிட் வைரலாகி வருகிறது.

Recommended Video

DMK Supportஆ Priya Bhavani Shankar, Netizen கேள்விக்கு PSB பதிலடி | MK Stalin, DMK

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். செய்தி ஊடகத்தில் பணியாற்றி பின்னர் சீரியல் நடிகையானார்.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் அக்காள் மகள்களில் ஒருவராக நடித்தார்.

ரிலீஸுக்காக வெய்ட்டிங்

ரிலீஸுக்காக வெய்ட்டிங்

இதேபோல் மான்ஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக அவரது நடிப்பில் களத்தில் சந்திப்போம் படம் வெளியானது. தொடர்ந்து குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, ஹாஸ்டல் ஆகிய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

சோஷியல் மீடியாவில்

சோஷியல் மீடியாவில்

மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார் பிரியா பவானிசங்கர். இதேபோல் ருத்ரன், இந்தியன் 2, பத்துத்தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியா பவானிசங்கர் அடிக்கடி தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து

ஸ்டாலினுக்கு வாழ்த்து

இதேபோல் தனக்கு நெருக்கமான நடிகர்களை கேலி செய்வது, சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பது என இருந்து வருகிறார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருந்தார் பிரியா பவானிசங்கர்.

பதிலடி கொடுக்கும் பிரியா

பதிலடி கொடுக்கும் பிரியா

அதனை பார்த்த சில நெட்டிசன்கள் அவர் திமுக ஆதரவாளர் என்றும் அவர்களின் தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பை பெற வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறுவதாகவும் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் கடந்த 2 நாட்களாய் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

பதறத்தானே செய்வாங்க

பதறத்தானே செய்வாங்க

அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், மேடம் இன்னும் 5 வருஷத்துல redgiantmovies, sun pictures, cloud nine movies இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க என பிரியா பவானிசங்கரை ஓட்டியிருந்தார்.

ஒரே பதட்டமா இருக்கு

ஒரே பதட்டமா இருக்கு

இதனை பார்த்து கடுப்பான பிரியா பவானிசங்கர் அந்த நெட்டிசனுக்கு நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல என கூறியுள்ளார்.

துணிச்சலை பாராட்டி

துணிச்சலை பாராட்டி

பிரியா பவானிசங்கரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மனதில் பட்டதை பட்டென பேசும் பிரியா பவானிசங்கரின் துணிச்சலையுத் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் திட்டியும் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X