பெரிய சிஐடி.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி.. விமர்சித்த நெட்டிசனுக்கு பிரபல நடிகை பதிலடி!

சென்னை: தன்னுடைய பழைய பதிவை எடுத்து போட்டு விமர்சித்த நெட்டிசன்களை பிரபல நடிகையான பிரியா பவானிசங்கர் விளாசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். செய்தி ஊடகத்தில் இருந்து சின்னத்திரை நடிகையானார்.

தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் முன்னணி நடிகர்களின் படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

தற்போது ருத்ரன், இந்தியன் 2, பத்து தல படங்களில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை பிரியா பவானிசங்கர், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து

ஸ்டாலினுக்கு வாழ்த்து

மேலும் நகைச்சுவை நடிகரான சதீஷுடனும் அவ்வப்போது சமூக வலைதளம் மூலம் வம்பிழுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா பவானிஷங்கர், சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பல மடங்கு நம்பிக்கையுடன்

பல மடங்கு நம்பிக்கையுடன்

நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்து கொண்டிருக்குறோம் வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார்.

கடுப்பான பிரியா

கடுப்பான பிரியா

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் யார் என்று தெரியும் என திருமுருகன் காந்திக்கு ஆதரவான அவருடைய பதிவுகளை ஷேர் செய்து விமர்சித்தனர். இதனால் கடுப்பான பிரியா பவானிசங்கர் தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுல என்ன பெருமை?

இதுல என்ன பெருமை?

தன்னை விமர்சித்த நெட்டிசனுக்கு பதில் அளித்துள்ள பிரியா பவானிசங்கர், நக்கலாக பெரிய சிஐடி, ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம் லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் ஜர்னலிஸ்ட்டா இருந்திருக்கேன். என் வேலையே அதுதான்.. இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என விளாசியுள்ளார்.

முட்டாள்தனமான வாதம்

முட்டாள்தனமான வாதம்

மேலும் மற்றொரு நெட்டிசனுக்கு பதில் அளித்துள்ள பிரியா பவானிசங்கர், take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன். மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை என்றும் பதில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X