என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு.. தமிழகம் கண்டிராத சிரிப்பு.. சதீஷை பங்கம் செய்த பிரபல நடிகை!

சென்னை: நடிகை பிரியா பவானிஷங்கர் நடிகர் சதீஷை பங்கமாக கலாய்த்துள்ள டிவிட் வைரலாகி வருகிறது.

Recommended Video

Sathish யை பங்கமாக கலாய்த்த Priya Bhavani Shankar | Sunny Leone Sathish Movie

நடிகை பிரியா பவானிஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளார்.

தமிழில் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான பிரியா பவானிஷங்கர் இதுவரை தனியாக பெரிய ஹிட்டு எதையும் கொடுக்கவில்லை.

அருண் விஜய்க்கு ஜோடியாக

அருண் விஜய்க்கு ஜோடியாக

இருப்பினும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். ருத்ரன், இந்தியன் 2, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானிஷங்கர். இதேபோல் ஹரி இயக்கும் படத்திலும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானிஷங்கர்.

சதீஷ் கமெண்ட்

சதீஷ் கமெண்ட்

படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலை தளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார் பிரியா பவானிஷங்கர். அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில் அண்மையில் அவர் ஷேர் செய்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்து கிண்டலடித்திருந்தார் சதீஷ்.

சதீஷை பங்கம் செய்து..

சதீஷை பங்கம் செய்து..

இதனை பார்த்த நடிகை பிரியா பவானிஷங்கர், பதிலுக்கு சதீஷை கிண்டல் செய்து டிவிட்டினார். இப்படி மாறி மாறி இருவரும் கலாய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் சதீஷை பங்கம் செய்து டிவிட்டியுள்ளார்.

திகில் நகைச்சுவை..

திகில் நகைச்சுவை..

அதாவது பாலிவுட் நடிகையான சன்னி லியோன் புதிய தமிழ்ப்படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் 'சிந்தனை செய்' பட இயக்குநர் யுவன் இயக்கும் வரலாற்றுப் பின்னணியில் திகில் நகைச்சுவை ஜானரில் உருவாக உள்ளது.

அண்மையில் பூஜை..

அண்மையில் பூஜை..

இந்தப் படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிகர் சதீஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் தொடங்கியது. இதுகுறித்த செய்திகளும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

 தெய்வீக சிரிப்பய்யா உமக்கு

தெய்வீக சிரிப்பய்யா உமக்கு

இந்நிலையில் சதீஷ் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிக்கும் செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியா பவானிஷங்கர், சதீஷை மரணமாய் கலாய்த்துள்ளர். அதாவது, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு.. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

நான் சொல்லவா?

நான் சொல்லவா?

இதனை பார்த்த சதீஷ், இந்த படத்தில் உங்களுடைய கேமியோ ரோல் குறித்து நான் சொல்லவா என கேட்டு பதிலுக்கு கிண்டலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X