Priya mani :ஆச்சர்யம் அளித்த ஷாருக்கான்.. நடிகை பிரியாமணி நெகிழ்ச்சி!
மும்பை : நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகிபாபு என தமிழ் நடிகர்கள் அதிகமாக நடித்து வருகின்றனர்.
ஆனால் பிரியாமணிக்கு இந்தப் படம் ஷாருக்கானுடன் இரண்டாவது படம். முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் அவர் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார்.
ஆனால் ஜவான் படத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான கேரக்டர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியாமணியை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய ஷாருக்கான் :நடிகை பிரியா மணி தமிழின் மிகவும் முக்கியமான படங்களில் நடித்துள்ளார். கார்த்தியின் அறிமுகப்படமான பருத்தி வீரனில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது கேரக்டர் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் முத்தழகு கேரக்டர் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஐயய்யோ என காதல்வசப்பட்டவராக அவர் தன்னுடைய முகத்தில் காட்டிய எக்ஸ்பிரஷன்ஸ் ரசிகர்களின் பேவரிட்.
இவர் அறிமுகமானதே பாரதிராஜா இயக்கத்தில்தான். தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் இயக்க்ததில் நடித்துள்ளார். இறுதியாக ராவணன் படத்தில் நடித்த இவர், சமீபத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வந்தார். படங்களில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் தொடர் வாய்ப்புகள் வந்த காரணத்தால் தற்போது முழு வீச்சில் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். கஸ்டடி படத்தை தொடர்ந்து தற்போது ஜவான் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார் பிரியா மணி. இந்நிலையில், ஜவான் படத்தின் முதல்நாள் சூட்டிங்கில் பங்கேற்ற அவரை ஷாருக்கான் அடையாளம் கண்டுக் கொண்டு உற்சாகத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாராம்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷாருக்கான் கூறியுள்ளார். இதனால் பிரியாமணி மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் தன்னை ஷாருக்கான் நியாபகம் வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது தென்ன்ந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் படங்களில் நடித்துவரும் பிரியா மணி, வெப் தொடர்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
குயின்டன் கேங் என்ற தமிழ் படத்திலும் தி பேமிலி மேன் ஸ்டோரி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது ரீ என்ட்ரி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இவரது ட்ரீம் ரோல் நீலாம்பரி தான் என்று பேட்டியொன்றில் இவர் தெரிவித்திருந்த நிலையில், அதுபோன்ற கேரக்டர்கள் வந்தால் உடனடியாக ஒப்புக் கொள்வாராம். தமிழில் நடிக்க வில்லத்தனமான நாயகி கிடைச்சாச்சு என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications











