என்னது... கணவரை பிரிந்து வாழ்கிறேனா.. பதறியடித்து பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

சென்னை: கணவரை பிரிந்து வாழ்வதாக வெளியான தகவல் குறித்து பிரபல நடிகை போட்டோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

எவரே அட்டகாடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. தொடர்ந்து கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தார்.

கார்த்தியுடன் அவர் நடித்த பருத்தி வீரன் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார் நடிகை பிரியாமணி.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிஸியாக இருந்து வருகிறார் நடிகை பிரியா மணி. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள நடிகை பிரியா மணி, அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். நடிகை பிரியா மணிக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம்

ஷாருக்கான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம்

தற்போது நடிகை பிரியா மணி இரண்டு இந்தி படங்கள், மூன்று கன்னட படங்கள் இரண்டு தெலுங்கு படங்கள் மற்றும் இரண்டு தமிழ் படம் என 9 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை பிரியா மணி.

பிரியா மணி குறித்து வதந்தி

பிரியா மணி குறித்து வதந்தி


நடிகை பிரியா மணி கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை பிரியாமணி குறித்தும் அவரது கணவர் குறித்தும் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை பிரியா மணி தனது கணவர் முஸ்தபா ராஜூவை பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியானது.

வதந்திக்கு பதிலடி கொடுத்த பிரியா மணி

வதந்திக்கு பதிலடி கொடுத்த பிரியா மணி

இந்நிலையில் தீபாவளியை தனது கணவருடன் கொண்டாடியுள்ளார் நடிகை பிரியா மணி. அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியாமணி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு போட்டோ மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறார் பிரியா மணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X