ஏன் என்னாச்சு..? இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென்று விலகிய 'கண்ணடி' நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By

சென்னை: இன்ஸ்டாகிராமில் இருந்து பிரபல கண்ணடி நடிகை திடீரென விலகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Celebrity Gibberish Challenge | Dia Kushee, Trisha, Myna Nandhini, Priya Varrier

பிரபல மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். 'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இவர் புருவத்தை சுருக்கி, கண்ணடித்தும், விரல்களை துப்பாக்கிபோல் செய்து அதில் முத்தமிட்டு காதலனை சுடுவதுபோலவும் நடித்திருந்த காட்சி, பரபரப்பானது.

பள்ளி மாணவி

பள்ளி மாணவி

இதன் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். இஸ்லாமிய மதத்தினரை புண்படுத்தும் பாடல் காட்சியில் பிரியா வாரியர் நடித்திருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஒரு அடார் லவ் படத்தில் அவர் பள்ளி மாணவியாக நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது.

தமிழிலும் வெளியானது

தமிழிலும் வெளியானது

இவர் நடித்த ஒரு அடார் லவ் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு, படத்துக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து 'ஶ்ரீதேவி பங்களா' என்ற படத்தில் நடித்தார். இது நடிகை ஶ்ரீதேவி இறந்த சில மாதங்களுக்கு பின் உருவானதால், சர்ச்சையானது. இந்தப் படத்தில் ஶ்ரீதேவி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, கன்னடத்தில் கிரிக் லவ் ஸ்டோரி, தெலுங்கில் லவ்வர்ஸ் டே ஆகிய படங்களில் நடித்தார், பிரியா. இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. மலையாளத்திலும் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ரசிகர்கள் பெருகினர். அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தைத் தாண்டியது.

பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திடீரென்று மூடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பிரியா வாரியரும் ஒருவர். தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் அவர் திடீரென்று தனது கணக்கை, செயலிழக்கச் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிக பிரேக்

தற்காலிக பிரேக்

இதுபற்றி பிரியா வாரியர் தரப்பில் கூறும்போது, இன்ஸ்டாகிராம் கணக்கை மூட, குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. இது தற்காலிக பிரேக்தான். அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்குவார்' என்று தெரிவித்தனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமான அவர் இப்படியொரு முடிவெடுத்தது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X