உங்கள் உதட்டை கடிக்க வேண்டும்.. பிரபல நடிகையிடம் கேட்ட பிரபலம்.. நடிகை சொன்ன பதிலை பாருங்க!
சென்னை: உங்களின் உதட்டை கடிக்க வேண்டும் என்று கேட்ட பிரபலத்திற்கு பிரபல நடிகையான பிரியா வாரியர் பதிலளித்துள்ளார்.
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். 'ஓரு அதார் லவ்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
2018ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்ற பாடலில் பிரியா பிராகாஷ் வாரியர் கண்ணடித்த காட்சிகள் பெரும் ரீச்சை ஏற்படுத்தியது.

இந்திப் படம்
இதன்மூலம் பெரும் பிரபலமானார். இந்தப் பாடலுக்கு பிறகு இந்திய அளவில் கவனத்தை பெற்றார் பிரியா வாரியர். இதனை தொடர்ந்து'ஸ்ரீதேவி பங்களா' என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பிரியா பிரகாஷ்.

உதட்டை அசைத்து..
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள பிரியா வாரியர் அவ்வப்போது தனது போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா வாரியர், "ஹேப்பி நியூ இயர்" என்ற படத்தில் இடம் பெற்றுள்ள "மான்வா லாகே" பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

எப்படி கடிக்க வேண்டும்
இதற்கு பிரியா வாரியரின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், "உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று டைம் லைனில் கேட்டிருந்தார்.

பிரியா வாரியரின் பதில்
ஷரன் நாயரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பிரியா வாரியர் அவரை திட்டி தீர்ப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் நடிகை பிரியா வாரியரோ "ஹ்ம்ம்ம்ம் நான் செய்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

உதட்டை வைத்து ஒரு ரவுண்டு
இதனை பார்த்த மற்ற நெட்டிசன்கள் அப்படி என்றால் எங்களுக்கும் கற்றுக் கொடுப்பீர்களா என கேட்டு வருகின்றனர். கண்ணால் ஏற்கனவே பிரபலமான பிரியா வாரியர் தற்போது உதட்டை வைத்து ஒரு ரவுண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











