ஆண் நண்பருடன் முத்தமிட்டு விளையாடும் பிரியாவாரியர்… இப்படி கூட விளையாடலாமா… களமிறங்கும் ரசிகர்கள் !
மும்பை : பிரியா வாரியர் தனது ஆண் நண்பருடன் முத்தமிட்டு விளையாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கான நிலையில், இது என்னடா புதுவித விளையாட்டு என்று ரசிகர்களும் விளையாட தயாராகி வருகின்றனர்.
பிரியா வாரியரின் தீவிர ரசிகர்கள் இந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

உலக புகழ்
மலையாள நடிகையான பிரியா வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை உயர்த்தியும், சுருக்கியும், கண் அடித்தும் உலகம் புகழ் பெற்றார். அந்த படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்து இருந்தார். முதல் படமே வெற்றி பெற்றதால் அவருக்கு மலையாள கரையோரத்தில் ஏகப்பட்ட மவுசு.

ஹைலைட்
அவர் காட்டிய முகபாவத்தில் சொக்கிப்போன ரசிகர்களின் பேராதரவால், ஒரே நாளில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றார். அந்த பெண்ணுக்கு ஹைலைட்டே அந்த கண்ணுதான்பா என்று அனைவரும் ரசித்து ரசித்து வியந்து பாராட்டும் அளவுக்கு உச்சம் பெற்றது அந்த கண்ணடி சில்மிஷம்.

புது வித விளையாட்டு
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் ஆண் நண்பருடன் ஒரு கார்டை உதட்டின் மீது வைத்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விளையாட்டின் போது கார்டு காற்றில் பறந்து போக உதட்டோடு உதட்டில் முத்தமிட்டுக்கொள்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கான நிலையில், இது என்னடா புதுவித விளையாட்டு என்று ரசிகர்களும் விளையாட தயாராகி வருகின்றனர்.

என் தனிப்பட்ட விருப்பம்
சமீபத்தில் பிரியா வாரியல், நான் எனது நண்பர்களுடன் என்ன செய்கிறேன், என் வாழ்க்கையை எப்படி வாழ்கிறேன் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனவே, உங்கள் கருத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மிகவும் கோபமாக பதிவிட்டு இருந்தது மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











