ஓம் மந்திரத்துடன் தாமரை டாட்டூ.. சார்பட்டா நடிகையின் தாராளம்.. நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் பாருங்க!

சென்னை: சார்பட்டா பரம்பரை பட நடிகை முதுகில் ஓம் மந்திரம் மற்றும் தாமரையுடன் வரைந்துள்ள ஓவியம் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் தமிழகத்தின் சென்னையை பூர்விகமாக கொண்டவர். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் கும்பகோணத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.

பிரியதர்ஷினி ராஜ்குமாருக்கு தமிழ் சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கிளாசிக்கல் டான்ஸரான பிரியதர்ஷினி கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பிரேமி சீரியலின் மூலம் பிரபலமானார்.

ஆஸ்திரேலியாவில் பணி

ஆஸ்திரேலியாவில் பணி

இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் பிரியதர்ஷினி. அதன் பிறகு ஆஸ்திரேலியா சென்ற அவர், அங்கு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் 2012 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிரியதர்ஷினி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

அச்சம் என்பது மடமையடா..

அச்சம் என்பது மடமையடா..

தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அனாமிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிலம்பரசன், விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், பிரியா, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ராஜேந்திரன், மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

கவன் படத்தில் பாவனா

கவன் படத்தில் பாவனா

சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய் சேதுபதியின் கவன், ராகடம், மிஸ்டர் சந்திரமவுலி, தனிமுகன் மற்றும் நீயா போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த கவன் திரைப்படத்தில் அவர் பாவனா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது.

சார்பட்டா பரம்பரை படத்தில்

சார்பட்டா பரம்பரை படத்தில்

மேலும் நிலா, இறகை போலே, தி கால், மாதவி, கும்மியடி உள்ளிட்ட பல குறும்படங்களில் நடித்துள்ளார் பிரியதர்ஷினி ராஜ்குமார். கல்வி அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வரும் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார், சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தார்.

மிஸ்ஸிம்மா.. ஆங்கிலோ இந்தியன்

மிஸ்ஸிம்மா.. ஆங்கிலோ இந்தியன்

இந்தப் படத்தில் டாடி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் பிரியதர்ஷினி ராஜ்குமார். மிஸ்ஸிம்மா என்ற கதாப்பாத்திரத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டை பெற்றது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பெரும் பிரபலமாகி விட்டார் பிரியதர்ஷினி.

பிரியதர்ஷினி போட்டோ

பிரியதர்ஷினி போட்டோ

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள பிரியதர்ஷினி ராஜ்குமார், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டு திணறடித்துள்ளார். அதாவது, முதுகில் ஓம் மந்திரத்தையும் தாமரையையும் வரைந்துள்ளார் பிரியதர்ஷினி.

இதை வரைய ரொம்ப பயந்தேன்

இதை வரைய ரொம்ப பயந்தேன்

மேலும் அந்த போட்டோவுக்கு, ஓம் மணி பத்மே ஹம்.. புத்தரின் போதனைகள் அனைத்தும் அழகான மந்திரத்தில் மூழ்கியுள்ளன.
நான் இறுதியாக அதைச் செய்துவிட்டேன். இந்த டாட்டூவை வரைந்து கொள்ள நான் ரொம்பவே பயந்தேன்..
மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லைகள் மற்றும் தடைகளை உடைத்து என்னைக் கண்டுபிடிப்பதில் நான் எடுத்த முதல் படி இது.. என பதிவிட்டுள்ளார்.

என்ன பிஜேபியில் சேர்ந்து விட்டீர்களா?

என்ன பிஜேபியில் சேர்ந்து விட்டீர்களா?

நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் வரைந்துள்ள இந்த டாட்டூ போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் , என்ன தாமரையெல்லாம் முதுகில் வரைந்திருக்கிறீர்கள், பிஜேபியில் சேர்ந்து விட்டீர்களா என கேட்டு வருகின்றனர். பலரும் இந்த டாட்டூ அழகாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X