தளபதி 69 ஃபேமிலியில் இணைந்த நடிகை பிரியாமணி.. கூட்டணி மாஸாதான் இருக்கும் போலயே!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்கவுள்ளது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இந்தப்படத்தை முன்னதாக தகவல்கள் வெளியானபடி இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், மீண்டும் தளபதியுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
விஜய்யின் சினிமா பயணம் மிகவும் சிறப்பானது. இதனிடையே அவர் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார். இதையடுத்து தளபதி 69 படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகளை கடந்த இரு தினங்களாக கேவிஎன் நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் சர்வதேச அளவில் 400 கோடிகளை தாண்டி இந்தப் படத்தின் வசூல் காணப்பட்டது. படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, ஸ்னேகா, லைலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், ஏராளமான நடிகர்கள் பட்டாளத்தை வைத்து வேலை வாங்கியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதுவும் இந்தப் படத்திற்கு பின்னடைவாக அமைந்தது. ஆனாலும் விஜய் படத்திற்கே காணப்படும் வரவேற்பை இந்தப்படமும் பெற்று வசூலையும் குவித்துள்ளது.
தளபதி 69 படம்: இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தினை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் இந்தப் படத்தின் நடிகர்கள், நடிகைகள் குறித்த அடுத்தடுதத அறிவிப்புகளை கேவிஎன் நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. முதலில் படத்தின் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல் குறித்த அறிவிப்பு வெளியானது.

நடிகர்கள் அறிமுகம்: தொடர்ந்து படத்தில் நடிக்கவுள்ள நாயகிகள் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, அவர்கள் தளபதி 69 படத்தில் இணையவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் படத்தில் இணையும் இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் மேனன் குறித்தும் படக்குழு போஸ்டருடன் அறிவித்தது. இந்நிலையில் தற்போது படத்தின் மற்றொரு இணைப்பாக நடிகை பிரியாமணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி 69 பேமிலியில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
விஜய்யுடன் இணைந்த நடிகை பிரியாமணி: நடிகை பிரியாமணி பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பாக நடித்து வருபவர். பாலிவுட்டிலும் இவர் நடித்துவரும் நிலையில் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய மாஸ் ஹிட்டை கொடுத்தது. இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்த நிலையில், படம் ஆயிரம் கோடி ரூபாய்களை கடந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்திருந்தது. இந்தப் படத்தில் பிரியாமணியின் கேரக்டரும் மிகச்சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











