வயசு ஆனதே தெரியல.. மீண்டும் தமிழ் பக்கம் வாங்க.. பிரியாமணிக்கு அழைப்பு
சென்னை : பிரியாமணியின் புது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முத்தழகு மீண்டும் தமிழ் பக்கம் வா என்று ரசிகர்கள் அழைத்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதே மாடலிங்கில் துழைந்து கலக்கியவர் தான் பிரியா மணி. அதன் பின்னரே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கண்களால் கைது செய் இவருக்கு அறிமுகப்படம் என்றாலும் அதற்கு முன்பாகவே தெலுங்கு படம் ஒன்றில் படங்களில் நடித்து இருக்கிறார்.
அதன் பின்னர் தமிழில் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் நடித்தார் இப்படம் தான் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. பின்னர் இவர் நடித்த தெலுங்கு திரைப்படம் பெல்லைனா கொத்தாலு ஹிட் ஆக இவருக்கு வரிசையாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் பின் தமிழில் இவர் நடித்த பருத்திவீரன் திரைப்படம் தமிழில் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் கார்த்தி அறிமுகமானார்.
இப்படத்தில் பிரியாமணியின் ஆகச்சிறந்த நடிப்பால் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்தார் பிரியாமணி.

தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரியாமணி போட்டோஷுட் நடத்தியுள்ளர் அதன் புகைபடங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் முத்தழகு தமிழில் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும், எவ்வளவு தான் வயசு ஆனாலும் கலக்கலா இருக்கீங்களே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











