“கேப்டன் மில்லர்“ ஹீரோயின் இவரா?..இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை : தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகர் தனுஷ், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் இறுதியில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ் ம்ற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகி வரும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ந் தேதி வெளியாக உள்ளது.

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

வாத்தி படத்தைத் தொடர்ந்து ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக பான் இந்தியா படத்தில் நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ளார். சமீபத்தில் அட்டகாசமான மோஷன் போஸ்டருடன் போராளியாக தனுஷை முகமூடி அணிந்து மோட்டார் பைக்கில் செல்வது போன்ற போஸ்டர் வெளியானது. இந்த படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்த படம் 1930 களில் நடப்பதை போன்ற கதையாம். வரலாற்று ஆக்ஷன் அட்வன்சர் படமாக தயாராக உள்ள இந்த படம் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளார்களாம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் தொடாத ஒரு கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

கதாநாயகி

கதாநாயகி

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களின் கதாநாயகியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த மகிழ்ச்சி

மிகுந்த மகிழ்ச்சி

இதுகுறித்து நடிகை பிரியங்கா அருள் மோகன் தனது ட்விட்டரில், தனுஷுடன் பணியாற்றுவது குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. மேலும் தனுஷூக்கு ஜோடியாக நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஷூட்டிங் தொடங்கும் வரை காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷூட்டிங் எப்போது

ஷூட்டிங் எப்போது

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்துக்காக தனுஷ் நீண்ட தலைமுடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு தென்காசியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X