“உள்ளே பிடிச்சு போட்ருவோம்.. 7 வருசம் கம்பி எண்ணனும்” பிரபல நடிகையை டிவிட்டரில் மிரட்டிய போலீஸ்

ஸ்கை இஸ் பிங்க் படத்தில் வங்கியை கொள்ளையடிக்க திட்டம் போட்ட நடிகை பிரியங்கா சோப்ராவை மகாராஷ்டிரா போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை: வங்கியை கொள்ளையடிக்க திட்டம் போட்டதற்காக நடிகை பிரியங்கா சோப்ராவை மகாராஷ்டிரா போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவர், இந்தி மட்டுமின்றி தமிழ் உள்பட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்துள்ளார்.

சிலகாலம் ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா சோப்ராவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் தற்போது ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் நடித்துள்ளார்.

டிரெய்லர்

டிரெய்லர்

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பர்ஹான் அக்தர் நடித்துள்ளனர். ஸ்கை இஸ் பிங்க் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரிய நோயால் பாதிக்கப்பட்ட மகளுக்காக பெற்றோர் நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதை.

போலீஸ் எச்சரிக்கை

இந்த டிரெய்லரில் ஒரு காட்சியில், பர்ஹான் அக்தரிடம் தங்களின் பணத் தேவைக்காக வங்கியை கொள்ளையடிப்பது குறித்து பிரியங்கா பேசுகிறார். இதைப் பார்த்த மஹாராஷ்டிரா போலீஸ், "வங்கியை கொள்ளையடித்தால் இந்திய தண்டனை சட்டம் 393ன் படி, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" என டிவீட் வாயிலாக வேடிக்கையாக எச்சரித்துள்ளனர்.

பிரியங்கா பதிலடி

அதற்கு பதிலளித்த பிரியங்கா, "அய்யய்யோ போலீசிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம். இனி பிளான் 'பி'யை செயல்படுத்த வேண்டியது தான் எனக் கூறினார். அவரது இந்த வேடிக்கையான பதிலை ரசிகர்கள் லைக் செய்து பரப்பி வருகின்றனர். இந்த டிவீட்டுகளில் பர்ஹான் அக்தர் பெயரையும் அவர்கள் டேக் செய்துள்ளனர்.

காமெடி பதில்

எனவே அவர் வெளியிட்டுள்ள பதில் டிவீட்டில், ‘இதற்குத் தான் கேமரா முன்பு நின்று இனி இப்படியெல்லாம் திட்டம் போடக்கூடாது' என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா போலீசுக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக் பாஸ்

"பிரியங்கா சோப்ரா இந்த பிளானை கைவிடுங்க. பிக் பாஸ் உங்களை பாத்துக்கொண்டிருக்கிறார் "என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். எது எப்படியோ படத்திற்கு மகாராஷ்டிரா போலீஸ் உதவியால் இலவசமாக விளம்பரம் கிடைத்து விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X