இப்படி செஞ்சிட்டீங்களே.. ஆஸ்கர் விழாவில் பங்கேற்காத பிரியங்கா சோப்ரா.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் 2020 விருதுவிழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்காதது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.

நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய நடிகை என்பதையும் தாண்டி தற்போது உலகளவில் பிரபலமான ஒரு ஃபிகர் ஆகிவிட்டார். தனது நடிப்பால் இந்திய இதயங்களை மட்டுமல்லாது ஹாலிவுட் ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் 92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உலக சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

சிறந்த நடிகர்

வழக்கம்போல் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழையால் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் ஜாக்கீன் பீனிக்ஸ் பெற்றுள்ளார். இதேபோல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை நடிகை ரெனீ ஸெல்வெஜர் பெற்றிருக்கிறார்.

பாராசைட்

1917, ஜோக்கர் ட் உள்ளிட்ட ஒரு சில படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளது. தென் கொரியாவின் பாராசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளி அசத்தியிருக்கிறது. சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த படம் ஆகிய 4 விருதுகளை பாராசைட் படம் குவித்திருக்கிறது.

பங்கேற்கவில்லை

இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தான் பங்கேற்ற பழைய ஆஸ்கர் விருது விழாவின் ரெட் கார்ப்பெட் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

பங்கேற்க முடியவில்லை

அதில் கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் தான் பங்கேற்ற ஆஸ்கர் விருது விழாவின் ரெட் கார்ப்பெட் போட்டோக்களை ஷேர் செய்துள்ள பிரியங்கா சோப்ரா எது உங்களுடைய ஃபேவரைட் என கேட்டுள்ளார். இதேபோல் இந்த ஆண்டு தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ஆனாலும் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்த பிரியங்கா

சிறந்த படத்திற்காக உங்களின் ஓட்டு யாருக்கு என்றும் தனது ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. அதோடு பாராசைட் படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றால் வசனங்களுக்கு பயப்படுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தப்படியே பாராசைட் படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

இதனை தொடர்ந்து பாராசைட் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்காதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஆடை விஷயத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி வருகிறார் பிரியங்கா சோப்ரா.

கண்களுக்கு விருந்து

அண்மையில் நடைபெற்ற 77வது கோல்டன் குளோப் விருது விழாவில் தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் பங்கேற்றார் பிரியங்கா சோப்ரா. அப்போது அவர் அணிந்திருந்த பிங்க் நிற உடை பெரும் வைரலானது. இந்நிலையில் இன்றைய ஆஸ்கர் விருது விழாவிலும் அவர் கண்களுக்கு விருந்தளிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X