கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை! வைரல் வீடியோ!

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ்க்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் வாழ்த்து கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா குவாண்டிகா என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். இதன் மூலம் பிரபலமான அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோனஸை காதலித்தார். தன்னை விட 10 வயது இளையவரான நிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா.

27வது பிறந்த நாள்

27வது பிறந்த நாள்

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் கடந்த 16ஆம் தேதி தனது 27வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அன்று ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிக் ஜோனஸ்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அந்த இசை நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருக்கு அசத்தலாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உதட்டில் முத்தம்

பின்னர் மேடையில் இருந்தபடியே தனது கணவருக்கு காதலின் சின்னமான சிவப்பு ரோஜாவை நீட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரியங்கா சோப்ரா, தனது கணவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

இந்நிலையில் பிறந்த நாள் செலிபிரேஷன்ஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் நிக் ஜோனஸ். அதில் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய 27வது பிறந்த நாளை, எனது குடும்பத்துடனும் எனது நண்பர்களுடனும் எனது மனைவியுடனும் சேர்ந்து சிகாகோ மற்றும் செயின்ட்பாலில் கொண்டாடி வருகிறேன்.

சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி

சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி

என்னுடைய அழகான மனைவி என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து நான் ஃபுட் பால் விளையாட எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் பீசா, கேக், சிகர் உள்ளிட்டவற்றுடன் பிறந்த நாள் பார்ட்டியும் நடைபெற்றது.

நன்றியுள்ளவனாக இருப்பேன்

மறுநாள் ஸ்டேஜில் நீங்கள் எல்லோரும் எனக்காக பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினீர்கள். கடந்த இரண்டு நாட்களாக என் பிறந்த நாளுக்காக அன்பு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களை வெளிப்படுத்தியதற்கு நான் உங்களுக்கு வெறும் நன்றி மட்டும் சொல்ல முடியாது. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X