யோகி பாபுவிற்கு போட்டியாக பிரியங்கா சோப்ராவா.. இந்த போட்டோவைப் பார்த்தா உங்களுக்கே உண்மை புரியும்!
பிரியங்கா சோப்ராவின் வித்தியாசமான மேக்கப்பை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
லண்டன்: மெட்காலா நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா போட்டு வந்திருந்த மேக்கப்பையும், உடையையும் நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.
நடிகைகள் போடும் உடை, மேக்கப், சிகையலங்காரம் என அனைத்தையும் ரசிகைகள் பொது வாழ்க்கையில் செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனால், சமயங்களில் சில நடிகைகள் பேஷன் என்ற பெயரில் போடும் மேக்கப், மற்றவர்களைக் கவருவதற்குப் பதில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி விடுவதும் உண்டு.
அப்படித்தான் மெட்காலா 2019 நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையால் நெட்டிசன்களிடம் வசமாகச் சிக்கியுள்ளனர்கை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவரும்.

ஆலீஸ் கெட்டப்:
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தீம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிரியங்கா சோப்ராவுக்கு லெவிஸ் கரோல்-ன் வொண்டர்லேண்ட் ஆலீஸ் கெட்டப் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் சாம்பல் நிற புருவங்கள், வெள்ளை நிற கோடுகள் கொண்ட இமை முடிகள், வித்தியாசமான உடை மற்றும் ஹேர்ஸ்டைலில் வந்திருந்தார் பிரியங்கா.
யோகி பாபுவுக்கு போட்டி:
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவின் மேக்கப்பையும், ஹேர்ஸ்டைலையும் செம கலாய் கலாய்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான சீனிவாஸ் தனது டிவிட்டரில், ‘யோகி பாபுவிற்கு போட்டி வந்தாச்சு' என பிரியங்காவின் முடியை கேலி செய்துள்ளார்.
வயர் தான் காரணமா?
இந்த ரசிகரோ, பிரியங்கா தலையில் வைத்துள்ள விக்கையும், குச்சிகளையும் பிரபல வயர் கொண்டு டிசைன் செய்ததாக கலாய்த்துள்ளார்.
வீரப்பன் மீசை:
இவர் கற்பனைத் திறமையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பிரியங்காவின் தலை முடியை, வீரப்பன் மீசையோடு சேர்த்து எப்படி ரூம் போட்டு யோசித்திருக்கிறார் பாருங்கள்.
நிக் மட்டும் பாவமில்லையா?
அயன் படத்தில் ஜகன், தமன்னா தோழியிடம் கூறுவாரே, ‘நீ மட்டும் ஏம்மா சும்மா போற. தலைமுடியை விரிச்சுப் போட்டுட்டு வந்தா நாங்க இலவசமா இதைக் கொடுப்போம்'னு. அதைப் போல நிக் ஜோன்ஸை மட்டும் ஏன் எடிட் செய்யாமல் விட்டு விட்டீர்கள் என நெட்டிசன்களின் கேட்டுள்ளார் இவர்.


Click it and Unblock the Notifications











