Vijay: தளபதி 68ல் இணையும் முன்னணி நடிகை... அவங்க மூணு பேர் கிடையாதாமே!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் படம் ரிலீசாகவுள்ளது.

படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு மீண்டும் பேட்ச் வேலைகளுக்காக படக்குழுவினர் காஷ்மிரில் சூட்டிங் நடத்தினர்.

இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

Actress Priyanka mohan joined in Actor Vijays Thalapathy 68 movie?

விஜய்யுடன் இணையும் முன்னணி நடிகை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு, காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணம் ஆகிய இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டது.

காஷ்மீரில் முன்னதாக 52 நாட்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் படத்தின் பேட்ச் வேலைகளுக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றிருந்தனர். படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள விஜய், தற்போது நார்வேயில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் உள்ளார். படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் மாதத்தில் இறுதியில் அல்லது நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Priyanka mohan joined in Actor Vijays Thalapathy 68 movie?

இந்த இசை வெளியீடு மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் மாறி மாறி தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விரைவில் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக விஜய் நாடு திரும்பவுள்ளார். விரைவில் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் எப்போதுமே ஒரு குட்டிக்கதையை சொல்வதை வழக்கமாக்கியுள்ளார் விஜய். இந்நிலையில், இசைவெளியீட்டில் அவரது பேச்சையும் இந்த கதையையும் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவரது அரசியல் பிரவேசத்திற்கான பணிகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டில் அவரது பேச்சை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Actress Priyanka mohan joined in Actor Vijays Thalapathy 68 movie?

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி68 படத்தல் வெங்கட்பிரபு இயக்கத்தில் இணையவுள்ளார் விஜய். இதுகுறித்த அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் சூட்டிங் அப்டேட் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் தளபதி 68 படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரியங்கா மோகன் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் முன்னதாக சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்றவர்கள் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர்கள் மூவருமே கிடையாது என்பதை வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X