Priyanka Mohan: விஜய்க்கு வில்லனாக அஜித் நடிக்கனும்.. பிரியங்காவின் ஆசையை பாருங்க!

சென்னை: நடிகை பிரியங்கா மோகன் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷுடன் பிரியங்கா இணைந்து நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் பிரியங்காவை பார்க்க முடிகிறது. படத்தின் டீசர், டிரெயிலர் ஆகியவை வெளியான நிலையில், அதில் பிரியங்காவின் கெட்டப் மிரட்டுகிறது. முன்னதாக டாக்டர், டான் படங்களில் சுட்டிகையாக நடித்துள்ள பிரியங்கா, கேப்டன் மில்லர் படத்தில் துப்பாக்கியை எடுத்து சுடும் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கூறினார். நமது வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள், மற்றொரு பெண்ணிற்கு தப்பான விஷயத்தை செய்யலாமா என்று பிரியங்கா கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் பிரியங்கா மோகன், தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தான் திருமணம் செய்துக் கொண்டால் அனைவருக்கும் சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.

Actress Priyanka mohan revealed her wish about Vijay And Ajith

நடிகை பிரியங்கா மோகன்: நடிகை பிரியங்கா மோகன் டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த அறிமுகப்படமே தமிழில் அவருக்கு சிறப்பான இடத்தை பெற்றுத் தந்தது. ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்த, இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவே டான் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா. தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்துவரும் பிரியங்கா மோகன் அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

கேப்டன் மில்லர் படம்: தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடிந்துள்ளார் பிரியங்கா மோகன். இந்தப் படத்தின் டீசர், டிரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பீரியட் படமாக கேப்டன் மில்லர் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தில் மிகவும் எளிமையான மற்றும் இயல்பான கேரக்டரில் பிரியங்கா மோகன் நடித்துள்ளதை பார்க்க முடிகிறது. இது மட்டுமில்லாமல் அதிரடியாக துப்பாக்கி ஏந்தி சுடும் காட்சியிலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கேப்டன் மில்லர் பிரமோஷன்கள்: இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிலையில், ஆண், பெண் இருவருக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று பிரியங்கா பேசினார். நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஐஸ்வர்யாவிடம், இளைஞர் ஒருவர் அத்துமீறியதை தொடர்ந்து பிரியங்கா இவ்வாறு பேசியுள்ளார். தொடர்ந்து படத்திற்கான பிரமோஷனையொட்டி பல பேட்டிகளை கொடுத்துவரும் பிரியங்கா, தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கும் கூலாக பதில் சொல்லியுள்ளார். இப்போ தனக்கு கல்யாணம் இல்லை என்றும் ஆகும்போது சொல்கிறேன் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வில்லன் அஜித்: தொடர்ந்து விஜய்க்கு யாரை வில்லனாக வைக்கலாம் என்று ஆங்கர் கேட்ட கேள்விக்கு அவருக்கு வில்லனாக அஜித் சார் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று தன்னுடைய ஆசையை பிரியங்கா வெளிப்படுத்தினார். தொடர்ந்து பிரியங்கா யாருடன் இணைந்து நடிக்க பிரியப்படுகிறார் என்று கேட்கப்பட்ட நிலையில், தனக்கு ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்றும் இதை பல முறை பல இன்டர்வியூக்களில் தான் கூறியுள்ளதாகவும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய ரசிகை தான் என்றும் பிரியங்கா உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X