Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வீக்னஸ்.. பிரியங்கா மோகன் வெளிப்படுத்திய உண்மை!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர்களில் மிகவும் முக்கியமானவர்.

ஆயிரங்களில் துவங்கிய இவரது திரைப்பயணம் தற்போது கோடிகளில் புரள்கிறது. தற்போது எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாக இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.

Actress Priyanka mohan revealed the Weakness of Actor Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. டாக்டர், டான் படங்களின்மூலம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாவீரன் படமும் சிவகார்த்திகேயனுக்கு மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது.

டாக்டர், டான் படங்களின் வெற்றி: முன்னதாக டாக்டர் மற்றும் டான் படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். தமிழில் சிறப்பான வரவான இவர், அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதனிடையே அவர் தனது சமீபத்திய பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் வீக்னஸ் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வீக்னஸ்: சிவகார்த்திகேயனுக்கு இனிப்புகள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். அவர் அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் சூட்டிங் ஸ்பாட்டிலும் எப்போதும் இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார் என்றும் பிரியங்கா தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் சாப்பிடுவது மட்டுமில்லாமல் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொல்லி சிவகார்த்திகேயன் வற்புறுத்துவார் என்றும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

Actress Priyanka mohan revealed the Weakness of Actor Sivakarthikeyan

பிரியங்காவை வற்புறுத்திய சிவகார்த்திகேயன்: தன்னையும் பல முறை இனிப்புகளை சாப்பிட சொல்லி சிவகார்த்திகேயன் வற்புறுத்தியதாகவும் பிரியங்கா மோகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தனக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சிவகார்த்திகேயனும் தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் தங்களது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இனிப்புகளை தவிர்ப்பது வழக்கமாக உள்ள நிலையில், அதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் சிவகார்த்திகேயன் அதிகமான இனிப்புகளை எடுத்துக் கொள்வது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படம்: தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 3 மாதங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து இன்னும் மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துவரும் சிவகார்த்திகேயன், இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X